மு.நித்தியானந்தன். சென்னை 600041: க்ரியா பதிப்பகம், புதிய இலக்கம் 2, பழைய இலக்கம் 25, 17வது கிழக்குத் தெரு, காமராஜர் நகர், திருவான்மியூர், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2014. (சென்னை 600 017: சுதர்சன் கிராப்பிக்ஸ்).
179 பக்கம், விலை: இந்திய ரூபா 400., அளவு: 23.5×16 சமீ., ISBN: 978-93-82394-09-9.
பதுளையைப் பிறப்பிடமாகக்கொண்ட மு.நித்தியானந்தன், இலங்கைப் பல்கலைக்கழகத்தில் (கொழும்பு) பொருளியல் சிறப்புப்பட்டம் பெற்றவர். லேக் ஹவுஸ் தாபனத்தின் தினகரன் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். அவ்வேளையில் சிறந்த பத்திரிகையாளருக்கான டீ.ஆர்.விஜயவர்த்தனா விருதினைப் பெற்றிருந்தார். பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1983 இனக்கலவரத்தையடுத்து புலம்பெயர்ந்து தற்போது லண்டனில் வசித்துவருகின்றார். இந்நூலில் மு.நித்தியானந்தன் எழுதிய ஏழு தேர்ந்த கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கோப்பிக் கிருஷிக் கும்மி: மலையகத்தின் முதல் நூல், ஆபிரஹாம் ஜோசப் எழுதிய தமிழ் வழிகாட்டி, துரைத்தன அடக்குமுறையும் கூலித் தமிழும், கருமுத்து தியாகராசர்: இந்தியத் தமிழர்களுக்காகக் குரல் எழுப்பிய முதல் பத்திரிகையாளர், சுந்தரமீனாள் அல்லது காதலின் வெற்றி: மலையகத்தின் முதல் நாவல், கண்ணனின் காதலி: அதியற்புதக் கற்பனையும் யதார்த்தமும், அஞ்சுகம்: மலையக இலக்கியத்தின் முதல் பெண் ஆளுமை ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.