10780 செம்மொழி மீளாய்வு.

கதிர்.சரவணபவன். வவுனியா: தோணிக்கல் நாகபூஷணி அம்மன் தேவஸ்தான ஆலய பரிபாலன சபையினர், 1வது பதிப்பு, 2012. (வவுனியா: பொய்கை கணனிப் பதிப்பகம், பேருந்து நிலைய மேல்மாடி).

152 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

சங்க இலக்கிய நூல்களான பதினெண்கீழ்க் கணக்கு நூல், இன்னாநாற்பது மூலமும் உரையும், நன்னூலார்தம் ஆசிரிய மாணவ இலக்கணம் சார்ந்த கலையாத கல்வியும், மற்றும் சமய சமூக இலக்கியம் சார்ந்த கட்டுரைகளும் இந்நூலில் உள்ளன. கலையாத கல்வி என்ற பிரிவில் ஓரெட்டில் ஆடாத ஆட்டம், ஈரெட்டில் கற்காத கல்வி, மூவெட்டில் ஆகாத மணம் என இன்னோரன்ன தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள 24 சிறு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சமயக் கட்டுரைகளாக அவனன்றி ஓர் அணுவும் அசையாது, ஞானப்பிரகாச சிவம் குரு முதல்வர், உலகியல் வாழ்வு, அழகுக்கண்ணா அருள் தாராய் ஆகிய தலைப்புகளில் ஆசிரியரின் கட்டுரைகளும், இன முரண்பாட்டுச் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு யுத்தமன்றிச் சமாதானமே என்ற சமூகவியல் கட்டுரையும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

12823 – குறிஞ்சிக் குமரிகள்(நாவல்).

எஸ்.புஷ்பராஜன். யாழ்ப்பாணம்: புஷ்பராஜா துஜீஸ்காந்த், 1வது பதிப்பு, ஜனவரி 2018. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ மாருதி பிரின்டர்ஸ், 555, நாவலர் வீதி). xx, 125 பக்கம், தகடுகள், சித்திரங்கள், விலை: ரூபா 400., அளவு: 20.5