10781 சொல்லமறந்த கதைகள்.

லெ.முருகபூபதி. சேலம் 636003: மலைகள் பதிப்பகம், 119, முதல் மாடி, கடலூர் பிரதான வீதி, அம்மாப் பேட்டை, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2014. (சென்னை 600077: மணி ஓப்செட்).

176 பக்கம், விலை: இந்திய ரூபா 200., அளவு: 21.5×14 சமீ.

நம்பிக்கை, எதிர்பாராதது, காவி உடைக்குள் ஒரு காவியம், காலிமுகம், கண்ணுக்குள் சகோதரி, உயிர்ப்பிச்சை, கண்டம், விபத்து, தமிழ் மூவேந்தர்களும் ரஷ்ய மன்னர்களும், அநாமதேய தொலைபேசி அழைப்பு, வீணாகிப்போன வேண்டுகோள், லிபரேஷன் ஒப்பரேஷன் ஒத்திகை, நிதானம் இழந்த தலைமை, வழிகாட்டி மரங்கள் நகருவதில்லை, காத்திருப்பு-புதுவை நினைவுகள், ஏரிக்கரைச் சிறைச்சாலை, மனமாற்றமும் மதமாற்றமும், மரணதண்டனை தீர்ப்பு?, மனிதம், பின்தொடரும் வியட்நாம் தேவதை, ஆகிய 21 தலைப்புகளில் அவ்வப்போது எழுத்தாளர் முருகபூபதி எழுதிய அனுபவப் பகிர்வுகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. தன் வாழ்வின் முக்கியமான சந்திப்புகள், அனுபவங்கள், சிந்தனைகள் ஆகியவற்றின் திரட்சியாக இத்தொகுப்பு அமைந்துள்ளது. இலங்கையில் நீர்கொழும்பில் பிறந்த முருகபூபதி, சிறுகதைக்காகவும், நாவலுக்காகவும் இருமுறை தேசிய சாகித்திய விருதுகளை இலங்கையில் பெற்றவர். வீரகேசரி நாளேட்டில் பணியாற்றியுள்ள முருகபூபதி 1987 முதல் அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழ்கிறார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், நீர்கொழும்பு இலக்கிய வட்டம் ஆகியனவற்றில் இணைந்து இயங்கிய இவர், புலம்பெயர்ந்தபின்னர் அவுஸ்திரேலியாவில் தமிழ் அகதிகள் கழகம், தமிழர் ஒன்றியம், தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை மாணவர் கல்வி நிதியம், சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் ஆகியனவற்றை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தவர். சிறுகதை, நாவல், கட்டுரை, பத்தி எழுத்துக்கள், பயண இலக்கியங்கள், சிறுவர் இலக்கியம் முதலான துறைகளில் நூல்களை எழுதியிருப்பவர். அத்துடன் சில நூல்கள், மலர்களின் தொகுப்பாசிரியராகவும் பணியாற்றியவர்.

ஏனைய பதிவுகள்