சபா. ஜெயராஜா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
viii, 126 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-479-9.
கலை இலக்கியங்களை திறனாய்வு செய்யும் பலவிதமான அறிகைப் பரிமாணங்களைக் கொண்ட செயற்பாடுகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. புதிய திறனாய்வு, நவீனத்துவமும் நவ நடப்பும், வெளிப்பாட்டு நடப்பியற் கோட்பாடும் எதிர்வினைப்பாடுகளும், மார்க்சியத் திறனாய்வின் வளர்ச்சிக் கோலங்கள், கருத்தியலும் கருத்து வினைப்பாடும், உற்றறி கோட்பாடு, பின் இனக்குழுமக் கோட்பாடு, மீயறிகையும் எழுதும் முயற்சியும், எடுத்துரைப்பியல், ஊடுதலையீட்டுக் கலை, எண்ணக்கரு மீட்டற் கலை, விடுதலை உளவியலும் திறனாய்வும், கற்பனையியல், புதுவரிசைக் கவிதை, நகரத்துக் கதைகள், கலைகள் பற்றிய உளவியல், புதிய அழகியல், சூழல் அழகியல், ஆடலின் அழகியல், சமகாலப் புதிய ஆடல்கள், பிரயோக ஊடக அழகியல், எதிர்க் கலைக் கோட்பாடு, பண்பாட்டுக் கைத்தொழில், நுகர்வோர் வாதம், தேய்வியம்பல், புலமை மூலதனம், விடுவிக்கப்படும் அறிவு, தெரிதாவின் கட்டுமானக் குலைப்பின் பிரயோகம், லகானை மீள்நோக்கல், ஓரங்கட்டப்பட்டவர்கள், அடையாளமும் நெருக்கடியும், கோணற் கோட்பாடும் கலை இலக்கியங்களில் அதன் தாக்கமும் ஆகிய 32 தலைப்புகளில் இதன் அத்தியாயங்கள் விரிகின்றன.