வி.சீ.கந்தையா. யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, புரட்டாதி 1963. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம்).
xvi, 214 பக்கம், விலை: ரூபா 2.75., அளவு: 21×14 சமீ.
Notes and Literary Criticism on Bharathi’s Panchali Sapatham என்ற ஆங்கில உபதலைப்புடன் அரும்பதவுரையும் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் கொண்டதாக வெளிவந்துள்ள இந்நூலின் ஆசிரியர் வித்துவான் பண்டிதர் வீ.சீ.கந்தையா அவர்களாவார். இந்நூலின் முதற் பாகத்தில் அழைப்புச் சருக்கம், சூதாட்டச் சருக்கம் ஆகியவையும், இரண்டாம் பாகத்தில் அடிமைச் சருக்கம், துகிலுரிதற் சருக்கம், சபதச் சருக்கம் என்பவையும் இடம்பெற்றுள்ளன. பொருள் விளக்கமும் குறிப்புரையும், 14 விளக்கக் கட்டுரைகளும் நூலின் பிற்பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. பாரதி தோன்றிய சூழ்நிலை, பாஞ்சாலி சபதத்தின் காவியப் பண்பு, கதைப் போக்கும் நூலமைப்பும், அத்தினாபுரச் சிறப்புகள், தருமர் செய்த இராசசூய யாகம், மாலை வருணனை, கண்ணன்புகழ், விதி விதி விதி, பெண்ணடிமை, பாஞ்சாலி சபதத்தினூடு அடிமையுற்ற பாரதமும் அக்கால அரசியல் நிலையும், பாஞ்சாலி சபதத்தினூடு பாரதியாரின் எதிர்கால இந்தியா, பாரதியாரது உவம உருவகச் சிறப்பு, கதாபாத்திரக் குணநலன், பாரதியார்-உரையாசிரியர் ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் அமைந்துள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 80719).