தங்கம்மா அப்பாக்குட்டி. தெல்லிப்பழை: இந்து இளைஞர் சங்கம், 1வது பதிப்பு, 1971. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
xvi, 216 பக்கம், தகடுகள், விலை: ரூபா 6.00., அளவு: 18×12.5 சமீ.
சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் தனது மலேசியா- சிங்கப்பூர் பயணங்களின்போது மேற்கொண்ட ஆன்மீக, இலக்கியச் சொற்பொழிவுகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. கணபதி கடாட்சம், முருக வழிபாடு, திருநாவுக்கரசர் திருவுள்ளம், கோவில் என்பது தில்லையே, மக்கட் பிறப்பின் மாண்பு, திருப்பள்ளியெழுச்சியும் திருவெம்பாவையும், கல்வியின் நோக்கமும் சமுதாயத் தொண்டும், ஆறுமுக நாவலர் சிந்தனைத்திறன், ஆலயம் அவசியமா?, கம்பர் கவிதை, மங்கையர்க்குத் தனியரசி, வள்ளுவர் காட்டிய வழி, சம்பந்தர் செந்தமிழ், திருவாசகம், சேக்கிழார் காட்டிய பெண்மைச் சிறப்புக்கள், மணிவாசகத்தில் ஞானமார்க்கம், பட்டினத்தார் பாடல், காரைக்காலம்மையார் சிவானுபவம், திருக்கோவையார், நால்வர் காட்டிய நெறிகள், பண்ணும் பரதமும், யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகள், சேக்கிழார் செந்தமிழ்ப் புலமை, சைவசித்தாந்தம், சுந்தரர் செந்தமிழ், சிவபணியின் சிறப்பு, வாக்குக்கு அருணகிரி ஆகிய 27 தலைப்புகளின்கீழ் இவ்வுரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 210950).