ப.ஸ்ரீஸ்கந்தன். சென்னை: வடலி வெளியீடு, 8A, அழகிரி நகர், 4ஆவது தெரு, லட்சுமிபுரம், வட பழநி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை).
208 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-0-9919755-2-5.
பிள்ளையாரும் விஸ்கிப் போத்தலும், எங்கள் வீட்டுப் புளியமரம், வேட்டைத் திருவிழா, கைதி இலக்கம் 31967, உடலே எந்திரம் மனசே மந்திரம், இதோ ஆரம்பமாகிறது நாடகம், தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, சிங்காரத்தின் காரும் ஸ்பிக்கர் செட்டும், கோபுரத்தில் ஆடிய பாம்பு, யாழ்ப்பாண வெள்ளப்பெருக்கு என இன்னோரன்ன 44 தலைப்புகளில் எழுதப்பட்ட ஆசிரியரின் சுவாரஸ்யமான கட்டுரைகளை இந்நூலில் காணமுடிகின்றது. இலங்கை, இந்தியா, ஜேர்மனி, நோர்வே, கனடா என்று பல தேசங்களைச் சுற்றிய அனுபவமும் அந்தந்த தேசத்துக் கலாச்சார உணர்களும் இக்கட்டுரைகள் மூலம் எமக்குக் கிடைக்கின்றன. ஒரு தனிப்பட்ட நாட்டு அனுபவமாக இல்லாமல் இவர் சொல்லிப்போகும் விசயங்கள் உலகப் பொதுவானவையாக இருக்கின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 234379).