ந.இரவீந்திரன். கொழும்பு 11: இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், இணை வெளியீடு, பூபாலசிங்கம் பதிப்பகம், 202 செட்டியார் தெரு, 1வது பதிப்பு, நவம்பர் 2012. (கொழும்பு 6: RST Enterprises, 114, W.A. Silva Mawathe).
59 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-1810-20-7.
முற்போக்கு இலக்கிய இயக்கம் எழுச்சியடைந்து வீறுடன் செயலாற்றி, மாற்றநிலையை எதிர்கொண்ட காலம் வரையான மூன்று தசாப்தங்களில் (1953-1982) அதன் கருத்தியல்தளத்தின் தலைமகனாக விளங்கியவர் பேராசிரியர் க.கைலாசபதி. அவரால் அரசியல் இலக்கியமும் பாரதியும் என்ற ஆய்வுக்கட்டுரைக்கு நெறிப்படுத்தப்பட்ட பல்கலைக்கழகத்துக்கு வெளியேயான மாணவன் ந. இரவீந்திரனாவார். அந்த வழிப்படுத்துகையின் பேறாக பாரதியின் மெய்ஞ்ஞானம் என்ற நூல் வெளிப்பட்டது. தனது ஆசிரியர் என்ற விசுவாசத்தைக் கடந்து கைலாசபதியின் முற்போக்கு இலக்கியப் பங்களிப்பைப் புறநிலைரீதியாக இந்நூலில் வெளிப்படுத்துகின்றார். பிந்திய முப்பது வருடங்கள் அந்த இலக்கிய இயக்கச் செல்நெறி சுயவிமர்சனத்தோடு புதிய தள விரிவாக்கங்களை எட்ட அவசியப்பட்ட பணியைக் கையேற்ற இயக்க அனுபவத்தோடான மறுமதிப்பீட்டினையும் இந்நூல் காட்டுகிறது. முற்போக்கு இலக்கியத்துக்கு கைலாசபதியின் பங்களிப்பு, ஊற்றுகள், புதிய பாதை, மக்கள் இலக்கியம், புதிய பண்பாடு, மறுமதிப்பீடு ஆகிய இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.