10801 உலகத் தமிழிலக்கிய வரலாறு: கி.பி.1851-2000.

கா.சிவத்தம்பி, ச.சிவகாமி, இராம. குருநாதன். சென்னை 600113: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாவது முதன்மை சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, 1வது பதிப்பு, 2005. (சென்னை 600 004: United Bind Graphics, 189, (101 D) இராயப்பேட்டை நெடுஞ்சாலை, மைலாப்பூர்).

xvi, 616 பக்கம், விலை: இந்திய ரூபா 180., அளவு: 22×14 சமீ.

உலகத் தமிழிலக்கிய வரலாற்று வரிசையில் ஆறாவது நூலாக இது வெளிவந்துள்ளது. தமிழகம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய பன்னாட்டுத் தமிழ் இலக்கிய வரலாறுகளை கவிதை, சிறுகதை, புதினம், நாடகம், நாட்டுப்புறவியல், குழந்தை இலக்கியம், இஸ்லாமியத் தமிழிலக்கியம், வாழ்க்கை வரலாற்றிலக்கியம், பயண இலக்கியம், கட்டுரை இலக்கியம், கடித இலக்கியம், சொற்பொழிவிலக்கியம், அறிவியல் தமிழ், சுவடித் தமிழ், மொழிபெயர்ப்புத் தமிழ், ஊடகங்களில் தமிழ், ஆய்வியல் தமிழ், ஆகிய பிரிவுகளின்கீழ் ஒவ்வொரு நாட்டு வரலாறு பற்றி அவ்வந்நாட்டுப் பிரமுகர்கள் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இலங்கைத் தமிழிலக்கியம் பற்றி எம்.ஏ.நுஃமான் (கவிதை), துரை. மனோகரன் (சிறுகதை), நா.சுப்பிரமணியம் (புதினம்), கா.சிவத்தம்பி (நாடகம்), அம்மன்கிளி முருகதாஸ் (நாட்டுப்புறவியல்), ரமீஸ் (இஸ்லாமியத் தமிழிலக்கியம்), செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம் (அறிவியல் தமிழ்), செ.யோகராசா (ஊடகங்களில் தமிழ்), க.அருணாசலம் (ஆய்வியல் தமிழ்) ஆகியோர் கட்டுரைகளை எழுதியிருக்கின்றார்கள். இந்நூலின் பின்னிணைப்பாக தமிழக அறிஞர் ச.சிவகாமி அவர்களின் தமிழிலக்கிய வரலாற்று நூல்கள் பற்றிய தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

13A03 – ஈழத்தில் நாடகமும் நானும்.

க.சொர்ணலிங்கம். யாழ்ப்பாணம்: க.சொர்ணலிங்கம், இலங்கை இளம் நடிகர் சங்கம், நவாலி, மானிப்பாய், 1வது பதிப்பு, டிசம்பர் 1968. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 32 கண்டி வீதி). (36), 200 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: