அல்லாமா ம.முஹம்மது உவைஸ். கொழும்பு: இரண்டாவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கரத்தரங்கு மகாநாடு, இலங்கைக் கிளை வெளியீடு, 1வது பதிப்பு, 1974. (கொழும்பு 10: அல்பியன் அச்சகம், 157, ஜயந்த வீரசேகர மாவத்தை, மருதானை).
(6), 136 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.
1973இல் திருச்சியில் நடைபெற்ற இஸ்லாமியத் தமிழாராய்ச்சி மாநாடு தொடர்பாக எழுதிய கட்டுரைகள் இவை. இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்கு வழிகோலியது திருச்சி மாநகரில் நிகழ்ந்த முதலாவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சிக் கருத்தரங்கு மாநாடு. இம்மாநாட்டில் பங்கேற்ற ஆசிரியர் தாய்நாடு திரும்பியதும் வீரகேசரி ஆசிரியர் பி. இராஜகோபால் அவர்களின் வேண்டுகோளின்பேரில் அப்பத்திரிகையில் எழுதிப் பிரசுரமாகிய தொடரே 39 தலைப்புகளில் இந்நூலுருவில் வெளியிடப்பட்டுள்ளது. யாதும் ஊரே, பழம் பெருமை, ஏன் திருச்சி?, முஸ்லிம் இரட்டையர், சூடான வரவேற்பு, எது கிப்லா?, மலர்ந்த வரவேற்பு, பேராளர் பணி, திருச்சி ஜமால், எழுந்து நிற்றல், தமிழகத் திருப்பங்கள், யாழ்ப்பாணத் திருப்பம், பல்கலைக்கழகத் திருப்பம், பரீட்சைத் திருப்பம், கல்வி அமைச்சுத் திருப்பம், தமிழ் உயர்ந்தது, மருதமுனைத் திருப்பம், தமிழ் மாநாடு, அறபும் தமிழும், வரவேற்புரை, தலைமை உரை, தொடக்க உரை, தனிப்பெருந் திருப்பம், சிறந்த பரிசு, திங்கள் ஏடு, எம் கடமை, இலக்கிய வரலாறு, மாபெருங் கலாச்சாரம், கவியரங்கு, சோறிருக்கும் சொத்திருக்கும், ஒழுக்கவியல், அருவியல், உடன்பிறப்பியலும் வரலாற்றியலும், இலக்கியவியலும், பொருளியலும், அரசியலும், சட்டவியலும், அறிவியலும் வாழ்வியலும் முடிவுரையும், நூல் வெளியீட்டு விழா. புத்தகக் காட்சி, இஸ்லாத்தின் சிறப்பு, பாராட்டு விழா ஆகிய 39 தலைப்புகளில் இத்தொடர்க் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2591).