ம.முகம்மது உவைஸ், பீ.மு.அஜ்மல் கான். மதுரை 625 021: பதிப்புத்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1986. (சென்னை 1: திறீயெம் பிரிண்டர்ஸ்).
xix, 611 பக்கம், விலை: இந்திய ரூபா 40., அளவு: 22.5×14.5 சமீ.
இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்களின் வரலாறு இது. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது ஆய்வுத் திட்டமாக அமைந்த இத்திட்டத்தின்கீழ் ஆறு தொகுதிகளில் எழுதி முடிக்கப்பட்ட இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாறு இதுவாகும். அணிந்துரை, சிறப்புரை, முகவுரை, நன்றியுரை, பின்னணி ஆகிய முதல் ஐந்து பிரிவுகளைத் தொடர்ந்து பல்சந்தமாலை, யாகோபு சித்தர் பாடல், ஆயிர மசலா என வழங்கும் அதிசய புராணம், மிகுறாசு மாலை, திருநெறி நீதம், கனகாபிசேக மாலை, சக்கூன் படைப்போர், முதுமொழி மாலை, சீறாப்புராணம், திரு மக்காப் பள்ளு ஆகிய பத்து இலக்கியங்கள் இந்நுலில் தொகுக்கப்பட்டுள்ளன. இறுதியாக சிறப்புப் பெயர் அகர நிரல் ஒன்றும் தரப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10265).