ம.முகம்மது உவைஸ். மதுரை 625 021: பதிப்புத்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1990. (சென்னை 1: திறீயெம் பிரிண்டர்ஸ்).
654 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 21×15 சமீ.
இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்களின் வரலாறு இது. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது ஆய்வுத் திட்டமாக அமைந்த இத்திட்டத்தின்கீழ் ஆறு தொகுதிகளில் எழுதி முடிக்கப்பட்ட இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாறு இதுவாகும். இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய காப்பியங்கள் பலவாகும். பெரும்பாலானவை இஸ்லாமியப் பெரியார்களைக் கருப்பொருளாகக் கொண்ட காப்பிய இலக்கணங்கள் அமையப் பாடப்பட்டவை. இஸ்லாமிய பெரியார்களின் உலக சாதனைகளை அதே அடிப்படையில் விவரிப்பனவாக சில அமைந்துள்ளன. மறைந்த பின்னர் சில பெரியார்கள் செய்துகாட்டிய ஆற்றல்மிக்க செய்கைகளை வர்ணிப்பதாகவும், இஸ்லாமிய வரலாற்றிலே தொடர்ச்சியாக நிகழ்ந்த சில போர்களை விளக்குவனவாகவும், பெரியார் வாழ்வில் நிகழ்ந்த வியக்கத்தக்க ஒரு நிகழ்ச்சியைக் கருவாகக்கொண்டதாகவும் இவை பாடப்பெற்றுள்ளன. இத்தொகுதியில் இஸ்லாமியத் தமிழ்க் காப்பியங்களான திருமணக்காட்சி, சீறாவென்கிற புராணம்- ஹிஜ்ரத்துக் காண்டம்- சின்ன சீறா, இராஜநாயகம், குத்பு நாயகம் என்னும் முஹியித்தீன் புராணம், திருக் காரணப் புராணம், குத்பு நாயகம் என்னும் முகியித்தீன் புராணம், முகியித்தீன் புராணம், திருமணி மாலை, இறவுசுல்கூல் படைப்போர், புதூகுஷ்ஷாம், தீன் விளக்கம், நவமணி மாலை, நாகூர்ப் புராணம், ஆரிபு நாயகம் ஆகிய 14 காப்பியங்கள் தொகுக்கப்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10814).