10808 இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாறு: தொகுதி 3: சிற்றிலக்கியங்கள்.

ம.முகம்மது உவைஸ், பீ.மு.அஜ்மல் கான். மதுரை 625 021: பதிப்புத்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1994. (சென்னை 1: திறீயெம் பிரிண்டர்ஸ்).

606 பக்கம், விலை: இந்திய ரூபா 70., அளவு: 22×14.5 சமீ.

இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்களின் வரலாறு இது. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது ஆய்வுத் திட்டமாக அமைந்த இத்திட்டத்தின்கீழ் ஆறு தொகுதிகளில் எழுதி முடிக்கப்பட்ட இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாறு இதுவாகும். இத்தொகுதியில் இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் (1) குறுங்காப்பியங்கள், (2) முஸ்லிம் தமிழ்ப் பிரபந்தங்கள், (3) முஸ்லிம் மரபுப் பிரபந்தங்கள், (4) மக்கள் வழக்குப் பிரபந்தங்கள் ஆகிய நான்கு வகைக்குள் அடங்குவதாக 29 இயல்களில் விளக்கப்பட்டுள்ளன. முன்னுரை, குறுங்காப்பியங்கள்-அறிமுகம், வேதபுராணம், பொன்னரிய மாலை, யூசுபு நபி காவியம், புத்தூகுல் துறூப், முகாஷபா மாலை, மூசா நபி புராணம், ஷாதலி நாயகம், முஸ்லிம் தமிழ்ப் பிரபந்தங்கள்-அறிமுகம், படைப்போர் இலக்கியங்கள், முனாஜாத்து இலக்கியங்கள், கிஸ்ஸா இலக்கியங்கள், மஸ்அலா இலக்கியங்கள், நாமா இலக்கியங்கள், கலம்பக இலக்கியங்கள், அந்தாதி இலக்கியங்கள்,  ஆற்றுப்படை, கோவை இலக்கியங்கள், மாலை இலக்கியங்கள், சதக இலக்கியங்கள், திருப்புகழ், கீர்த்தனம், கும்மி, சிந்து, தாலாட்டு, ஏசல், குறவஞ்சி இலக்கியங்கள், பிள்ளைத் தமிழ் ஆகிய 29 தலைப்புகளில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25070).

ஏனைய பதிவுகள்