கதிர் சரவணபவன் (உரையாசிரியர்). வவுனியா: தோணிக்கல் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் (ஆதிசிவன்) ஆலய பரிபாலன சபையினர், தோணிக்கல், 1வது பதிப்பு, 2011. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம், இல. 79, கந்தசாமி கோவில் வீதி).
73 பக்கம், விலை: ரூபா 280., அளவு: 29×21சமீ.
இந்நூலில் சங்க இலக்கியத்தின் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் விளம்பிநாகனார் அருளிச்செய்த நான்மணிக்கடிகை நூலின் மூலமும் அதற்கான உரையும், பூதஞ்சேந்தனார் இயற்றிய இனியவை நாற்பது என்ற நூலின் மூலமும் அதற்கான உரையும் இணைந்து வழங்கப்பட்டுள்ளன. உரையாசிரியரான இத்தொகுப்பின் ஆசிரியர் சிவசித்தாந்த வித்தகர், கலைமணி கதிர் சரவணபவன் அவர்கள் ஈழத்து முதுதமிழ்ப் புலவர் மு.நல்லதம்பியின் பேரனாராவார்.