10815 பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டக்களப்புத் தமிழ்.

வாகரைவாணன். மட்டக்களப்பு: ஆரணியகம், 479/5, புதிய கல்முனை வீதி, நாவற்குடா, 1வது பதிப்பு, டிசம்பர் 2005. (மட்டக்களப்பு: வனசிங்கா அச்சகம், திருமலை வீதி).

(10), 75 பக்கம், விலை: ரூபா 175., அளவு: 20.5×14.5 சமீ.

மட்டக்களப்புப் பிரதேச மக்கள் பயன்படுத்தும் பிரதேச மொழி வழக்குகளையும் அதன் வரலாற்று மூலங்களையும் இலக்கியங்களினூடாகத் தேடும் ஒரு முயற்சி. கிழக்கிலங்கையில் வழங்கப்படும் தமிழ்ச்சொற்களின் பழமையையும் செழுமையையும் சங்க இலக்கியங்கள் உட்பட பழந்தமிழ் இலக்கியங்களைச் சான்றுகாட்டி நிறுவும் ஆசிரியர், அதனூடாக மட்டக்களப்பு உட்பட ஈழமெங்கும் தமிழர்கள் மிகப் பழங்காலந் தொட்டே வாழ்ந்து வருகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். உதாரணமாக, அதர் என்னும் சொல் மட்டக்களப்பில் காட்டுவழியை அல்லது ஒற்றையடிப் பாதையைக் குறிக்கும். இச்சொல் தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, நற்றிணை, பரிபாடல், கலித்தொகை, சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகிய நூல்களில் இலங்குவதை காட்டியுள்ளார்.

ஏனைய பதிவுகள்