மு.தியாகராசா. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், 57ஆவது ஒழுங்கை, உருத்திரா மாவத்தை, 1வது பதிப்பு, மே 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(6), 107 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 22×14.5 சமீ.
புராண வித்தகர் மு.தியாகராசா எழுதிய இலகு நடை விளக்கத்துடனான இந்நூலில் சங்கத் தொகை நூல்களுள் ஒன்றாகிய புறநானூற்றின் குறிப்பிட்ட 43 பாக்கள், இலகுநடை விளக்கங்களுடன் தரப்பட்டுள்ளன. கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் அறிவோர் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் இவர் நிகழ்த்திய புறநானூற்றுத் தொடர் உரைகளில் தேர்ந்த 43 பாடல்களுக்கான உரை விளக்கக்கட்டுரைகள் இவை. அரசியல், வீரம், கொடை, நட்பு, ஆகியவை போன்ற பல உலகியல் நடைகளையும் ஒழுக்க நெறிகளையும் இப்பாக்கள் சித்திரிக்கின்றன. இவற்றின் கண்ணுள்ள இலக்கியச் செழுமை, சுவையாக திரு. மு.தியாகராசா அவர்களின் உரைவழியாக மெருகுபெற்று வாசகர்களை வந்தடைகின்றது.