10820 தமிழ் இலக்கியங்களில் பெண்களின் குணங்கள்.

செ.சந்திரசேகரம். யாழ்ப்பாணம்: அபி பதிப்பகம், 196/23, தலுவில் ஒழுங்கை,  நவாலி வடக்கு, மானிப்பாய், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2014. (யாழ்ப்பாணம்: மறுயுகம், 42, சேர். பொன் இராமநாதன் வீதி).

xiii, 116 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-44890-6-6.

தமிழ் இலக்கியங்களில் வடிவமைக்கப்பட்ட பெண்மை பற்றிய கருத்தியலாக்கத்தைப் பற்றிய சுவையான ஆய்வு முயற்சி இதுவாகும். மடம், நாணம், அச்சம், பயிர்ப்பு, குணங்களும் அவற்றின் சமநிலைகளும், பெண்களின் கற்பு, அன்பு வாழ்க்கையும் பெண்களின் நிறையும், பெண்களின் குணமாற்றங்கள், அறம், பொருள், இன்பம், மற்றும் வீடு, பெண்களின் குணங்கள் பெண் அடிமையா? ஆகிய பத்து அத்தியாயங்களினூடாக இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கலாநிதி செ.சந்திரசேகரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளராவார். (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 1001417). 

ஏனைய பதிவுகள்