விம்பம் அமைப்பு. லண்டன் E6 2BH: விம்பம், 4 Burges Road 1வது பதிப்பு, ஒக்டோபர் 2015. (லண்டன், அச்சக விபரம் தரப்படவில்லை).
48 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
லண்டன் விம்பம் அமைப்பினரின் இரண்டாவது நாவல் கருத்தரங்காக, குணா கவியழகனின் விடமேறிய கனவு, சேனனின் லண்டன்காரர், தேவகாந்தனின் கனவுச்சிறை ஆகிய மூன்று நாவல்கள் பற்றிய அறிமுகமும், விமர்சனமும், கலந்துரையாடலும் லண்டன் டிரினிட்டி நிறுவன மண்டபத்தில் 10.10.2015 அன்று முழுநாள் நிகழ்வாக காலை 10.30 மணி முதல் மாலை 6.00 மணிவரைநடந்தேறியது. அந்நிகழ்வையொட்டி வெளியிடப்பட்ட இம்மலரில், மேற்படி மூன்று நாவல்கள் பற்றிய பல்வேறு விமர்சனங்களின் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. மூன்று நாவல்கள் பற்றிய பொது அறிமுகமாக மு.புஷ்பராஜனின் முதலாவது கட்டுரை அமைகின்றது. விடமேறிய கனவு நாவல் பற்றி டிசெ தமிழன், கௌரி பரா, யமுனா ராஜேந்திரன், அ.இரவி, சந்திரிக்கா, சந்திரா இரவீந்திரன் ஆகியோரும் லண்டன்காரர் பற்றி ச.வேலு, கவிதாபாரதி, கோகுலரூபன், எம்.பௌசர் ஆகியோரும், கனவுச்சிறை பற்றி மு.நித்தியானந்தன், மீராபாரதி, எஸ்.வாசன், தேவிபாரதி, அருண்மொழிவர்மன் ஆகியோரும் வழங்கிய விமர்சனங்கள் இம்மலரில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.