10826  ஏ.ஜீ.எம்.ஸதக்கா: எழுத்தின் புன்னகை.

ஏ.ஜீ.எம்.ஸதக்கா (மூலம்), ஏ.பீ.எம். இத்ரீஸ் (பதிப்பாசிரியர்). வாழைச்சேனை-5: காகம், மஹ்மூட் ஆலிம் வீதி, 1வது பதிப்பு, 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட், ஸ்டேஷன் வீதி).

616 பக்கம், விலை: ரூபா 1500., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-53885-0-4.

வாழைச்சேனையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஏ.ஜீ.எம்.ஸதக்கா (1970-2011)அவர்களின் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் (இலக்கியம், அரசியல், சமயம், பண்பாடு, இதழியல், கடிதங்கள்) ஆகியவற்றை உள்ளடக்கிய பெருந்தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. படைப்புக்களின் விபரங்கள், புகைப்படங்கள் என்பன பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளன. ஸதக்காவின் இலக்கிய எழுத்தியல் பணிகள் பற்றிய மதிப்பீடுகளை வாழைச்சேனை அமர், எம்.எம்.எம்.நூறுல் ஹக், திக்கவல்லை ரதீமா, அஷ்ரப் சிஹாப்தீன், ஏ.பி.எம். இத்ரீஸ், சிதம்பரப்பிள்ளை சிவக்குமார், மாணிக்கவாசகன், ஜிப்றி ஹாஸன், ஸபீர் ஹாபிஸ் ஆகியோர் வழங்கியுள்ளனர். கடந்த 25 ஆண்டுகளாக நாடளாவியரீதியிலும், புலம்பெயர் அரசியல், இலக்கிய ஏடுகளிலும் ஒரு படைப்பாளியாகவும் இதழியலாளராகவும் ஆய்வாளராகவும் ஸதக்கா நன்கு அறியப்பட்டவர். 20.8.2011 அன்று  மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் மரணமான  கவிஞர் ஸதக்கா வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை சாதலியா வித்தியாலயத்தின் ஆசிரியராகப் பணியாற்றியவர். உயிர்ப்பைத் தேடும் வேர்கள் என முன்னர் அறியப்பட்ட காகம் அமைப்பினரின் வெளியீடாக இந்நூல் மலர்ந்துள்ளது. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது). 

ஏனைய பதிவுகள்

Cash Balloons Slots

Content Jogue Gems Bonanza slot online sem download – Catamênio Da Roleta Cassino Online Your Passport To Comparável Slots O Aquele É Briga Acabamento Balloon?