கனகசபாபதி நாகேஸ்வரன் (மூலம்), எஸ்.வை.ஸ்ரீதர் (பதிப்பாசிரியர்). பெலிகுல்லோயா: கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் மணிவிழாக் குழு, சப்ரகமுவ பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xi, 222 பக்கம், விலை: ரூபா 900., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-4745-00-1.
பழந்தமிழர் வரலாறு, சமயம், பண்பாடு, கலை, கல்வி, இலக்கியம், மருத்துவம், விரதங்கள், விழாக்கள் எனப் பல்துறைசார் கட்டுரைகளின் தொகுப்பான இந்நூலில் 23 பயன்மிக கட்டுரைகள் அடங்கியுள்ளன. கலை, இலக்கிய ஆக்கத்திறன்கள்- ஒரு நோக்கு, மொழியும் வானொலியும், எழுத்தில் எதனை எளிமைப்படுத்துவது?, சாதியம் எழுப்பிய சிந்தனை, மணிமேகலை- காப்பியநலன், கனவோ இது நனவோ, யோகக் கலை-நவீன யுகத்தின் மருத்துவம், பெண்மையரசு, பெண்ணின் மாண்பும் பெண்மை நலன்களும், சூல் கொண்ட எழுத்து முகில் பால.வயிரவநாதன்-அணிந்துரை, கவிஞர் பு.நிஸாந்தின் ‘பனி விழும் இரவுகள்’ கவிதைத் தொகுப்பு-அணிந்துரை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் தமிழ்ப் பண்பாடும், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இந்து தருமம்-96, இந்திய காங்கிரஸ் வளர்ச்சியில் சில போக்குகள், தமிழர்களின் கல்வித் தரம், விழுமியக் கல்வி பற்றிய கூர்த்த சிந்தனைகள், விழுமியக் கல்வியின் பயன்கள், தற்காலக் கல்விச் சிந்தனைகள், வாழ்க்கையும் விழுமியங்களும், சுதேச தமிழ் மருத்துவ இலக்கியமான பரராசசேகரத்தின் யாப்பியற் கவிதை வளம், இன்றும் நடைமுறையிலே பயன்படும் தமிழ் மருந்துகள் குறித்த இலக்கியச் சான்றுகள், சுதேச தமிழ் மருத்துவ நூல்கள், ஈழத்துச் சுதேச மருத்துவ நூல்களுள் முதன்மையானது பரராசசேகரம் ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் ஆசிரியரால் காய்தல் உவத்தலின்றி அழகிய தமிழ்நடையில் எழுதப்பட்டுள்ளன. வாகீச கலாநிதி சித்தாந்த பண்டிதர் கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மொழித்துறையின் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார்.