த.மலர்ச்செல்வன் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: பிரதேச செயலக கலாசாரப் பேரவை, மண்முனை வடக்கு, 1வது பதிப்பு, 2001. (மட்டக்களப்பு: ஈஸ்ரன் கிராப்பிக்ஸ்).
100 பக்கம், சித்திரங்கள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ.
மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகம் ஆண்டுதோறும் தமது பிரதேச இலக்கிய ஆர்வலர்களின் படைப்புகளைத் தொகுத்து கலாசாரப் பேரவையினூடாக ‘தேனகம்” என்ற ஆண்டு மலர்களின் வாயிலாகப் பதிவுசெய்து வருடாந்த முத்தமிழ் விழாவின்போது வெளியிட்டு வருகின்றது. அவ்வகையில் ஒன்பதாவது ஆண்டு மலராக வெளிவந்துள்ள இவ்விதழில் சுவாமி ஜீவனானந்தா, அதி.வண.யோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, அல்ஹாஜ் மௌலவி இஸட்.ஏ.ஹகீமுல் அமீன் (பலாஹி) ஆகியோரின் ஆசிச்செய்திகள், சிறப்பு விருது பெறுவோர் விபரம், கலைஞர் கௌரவம் பெறுவோர் விபரம், அஞ்சலி, சி.சண்முகம், உடுவை.எஸ்.தில்லைநடராஜா, க.கதிர்காமநாதன் ஆகியோரின் வாழ்த்துச் செய்திகள், விளம்பரங்களுடன், வேர்களைத் தேடி (த.மலர்ச்செல்வன் -மலர்க் குழு), மட்டக்களப்புப் பிரதேச நூல் வெளியீட்டு முயற்சி (கலாநிதி.செ.யோகராசா), வழக்கொழிந்த சட்டமும், வாழும் வழக்காறுகளும் முக்குவர் சட்டம் பற்றிய சிறு சிந்தனைகள் (எம்.மங்களேஸ்வரி), மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆங்கில நாடகத்துறையின் அண்மைக்கால வளர்ச்சி (செல்வி.தி.லலினி, செல்வி.அ.ர.பிரான்சிஸ்), இளைய விழிகள்: சஞ்சிகை பற்றிய ஓர் அறிமுகம் (றூபி வலன்ரீனா பிரான்சிஸ்), பேண் தரு அபிவிருத்தியும் மட்டக்களப்பும் (த.அருமைத்துரை), பாரம்பரியக் கூத்துக்கலையில் முகாமைத்துவம் (செல்வி தங்கராஜா ஹேமா), இனத் தேசிய வாதமாகிப்போன இலங்கைத் தேசியவாதம் (ஞா.ஸ்ரீநேசன்), மாற்றுச் சக்திகளின் முன் மொழிப் பிரச்சினை (சி.ஜெயசங்கர்), மட்டக்களப்பின் பாரம்பரியக்கலைகள் (செல்வி கிருஷாந்தி பாலன்), பூர்வீக மட்டக்களப்பு மக்களின் வணிக முயற்சிகள் (வ.சிவசுப்பிரமணியம்), மண்முனை வடக்கு கலாசாரப் பேரவையின் மாதம் ஒரு நிகழ்வு – அமரர் வ.அ.இராசரத்தினம் அவர்களின் திணைக்கதைகள் நூல் அறிமுக விழா ஆகிய கட்டுரைகளும், சிறுகதைகள், கவிதைகள் என்பனவும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54566).