கெகிறாவ ஸூலைஹா. பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, நவம்பர் 2011. (யாழ்ப்பாணம்: அச்சக விபரம் தரப்படவில்லை).
ix, 80 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 220., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-53263-1-5.
ஆங்கில மொழிவழியாக, பூமிப்பந்தில் காணக்கிடைக்கும் மொழிபெயர்ப்புக் கவிதைகளை தமிழில் வழங்கும் பணியை இந்நூலில் ஆசிரியர் மேற்கொண்டிருக்கிறார். பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியரான கெகிறாவ ஸ_லைஹா வேடிக்கையும் விநோதமும், அழகும் ஆர்ப்பரிப்பும், வாழ்வும் கனவும், காதலும் தவிப்பும், போரும் பிரிவும், மரணமும் தனிமையின் வலியும் ஆகிய ஆறு பிரிவுகளாக வகுத்து, இந்நூலில் 51 மொழிபெயர்ப்புக் கவிதைகளைத் தந்துள்ளார். ஜீவநதியின் 14ஆவது பிரசுரம் இதுவாகும்.