காளிதாசன் (மூலம்), இ.முருகையன் (தமிழாக்கம்). சென்னை 600002: சவுத் விஷன், 6, தாயார் சாஹிபு 2வது சந்து, இணை வெளியீட்டாளர், கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, வசந்தம், 44, 3வது மாடி, மத்திய சந்தைக் கூட்டுத் தொகுதி, 1வது பதிப்பு, ஜுன் 2000.(சென்னை 600005: மணி ஆப்செட்).
80 பக்கம், விலை: இந்திய ரூபா 90., அளவு: 21.5×13.5 சமீ.
காளிதாசரின் குமார சம்பவத்தின் எட்டாம் சருக்கமான ‘இன்ப ஆடல்’ முழுதும் கொண்ட கலைச்சுவைப் படையலாக இந்நூலை கவிஞர் இ.முருகையன் பாயிரம், இறைவியார் அகப்பொருள், பயன் ஆகிய மூன்று அத்தியாயத் தலைப்புகளின்கீழ் மொழிபெயர்த்து வழங்கியுள்ளார். முதல் ஏழு சருக்கங்களின் சுருக்கத் தமிழாக்கமும் கதையோட்டமும் விளக்கக் குறிப்புகளும் இளைய தலைமுறையின் எண்ணங்கள் சிலவும், பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளன. 2007இல் சாஹித்திய இரத்தினம் விருது பெற்ற கவிஞர் இராமுப்பிள்ளை முருகையன் சாவகச்சேரி, கல்வயல் கிராமத்தில் 23.4.1935இல் பிறந்தவர். தன் 12ஆவது வயதில் கவிதை புனையத் தொடங்கியவர். 1950 முதல் கவிதை எழுதிவரும் இவர் பல பிறமொழிக் கவிதைகளையும் தமிழுக்குத் தந்துள்ளார். நோக்கு என்ற காலாண்டுக் கவிதை இதழின் (1964-1965) இணை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.