எம்.சீ.ரஸ்மின். ஆனமடுவ: தோதென்ன வெளியீட்டகம், 1வது பதிப்பு, 2008. (கனேமுல்ல: ஜயந்த் பிரின்ட் கிராப்பிக்ஸ்).
x, 62 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 120., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-1848-17-0.
இலங்கையில் தமிழ் -சிங்கள இன மக்களிடையே காணப்படும் புரிந்துணர்வற்ற தன்மையினால் இரு இனங்களுக்கிடையே இடைவெளி ஏற்பட்டு நெடுங்காலமாகிவிட்ட நிலையில், இரு சாராரிடையேயும் தத்தமது பண்பாட்டுச் சூழல், வாழ்க்கை, காதல், சந்தோஷம், தாக்கம், அதிகார துஷ்பிரயோகம், அடிமைநிலை என்பனவற்றில் காணப்படும் ஒற்றுமைகள் கூட இரு இனங்களுக்கிடையே காணப்பட்ட இடைவெளியின் காரணமாக அறியப்படவில்லை. இந்நிலையை மாற்றி இனங்களுக்கிடையே கலை இலக்கிய உறவுப்பாலம் அமைக்கும் முயற்சிகள் நீண்டகாலம் நடைபெற்று வந்திருப்பினும், இப்பொழுதுதான் அவற்றை இரு மொழிகளுக்கிடையேயும் பரிமாறக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. அவ்வகையில் சிங்கள கலைஞர்களால், எழுதப்பட்ட இன ஒற்றுமைக்கான குரல்களை வெளிக்காட்டும் ஒரு கவிதைஃ பாடல் முயற்சியே இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிங்களக் கவிஞர்கள், பாடகர்களின் பாடல்கள் இவை. பிரேமகீர்த்தி அல்வில், ரட்ணஸ்ரீ விஜேசிங்ஹ, சுனில் ஆரியரத்ன, சேனநாயக்க வெரெலியத்த, நிலார் என்.காசிம், மஹிந்த சந்திரசேகர, பந்தல நாணய காரியவாசம், கமல் வித்தாரண, சோமதிலக்க திசாநாயக்க, மாலன் கருணாநாயக்க, ரோஹன தந்தெனிய, எஸ்.கே.மஹிபால, ஆனந்த ஹேவாரன்ஹிந்தகே, சந்திரா வாகிஷ்ட, சிட்னி மார்கஸ் டயஸ், அல்லே குணவன்ச தேரர், பியசேன ரத்துவிதான, அரிசென் அஹ{ம்புது, தீபால் சில்வா ஆகியோர் இதிலுள்ள பாடல்களின் ஆசிரியர்களாவர்.