பராக்கிரம நிரியெல்ல (சிங்கள மூலம்), சரோஜினி அருணாசலம் (தமிழாக்கம்). ராஜகிரிய: மக்கள் களரியின் வெளியீடு, 238 ஏ, ராஜகிரிய வீதி, 1வது பதிப்பு, 2008. (நுகேகொட: நியோ க்ராபிக்ஸ் பிரைவேட் லிமிடெட், 143, உடகமுல்ல புகையிரத நிலையப் பாதை, கங்கொடவில).
225 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 400., அளவு: 25.5×19 சமீ., ISBN: 978-955-1837-01-3.
இந்தியாவின் தேசிய நாடகக் கலைஞரான ஹபீப் தன்வீர், சரண்தாஸ் சோர் என்ற நாடகத்தை எழுதினார். வெற்றிகரமான இந்நாடகத்தினைத் தழுவி, அதன் முடிவை இலங்கை ரசிகர்களுக்கேற்ப மாற்றி இலங்கையின் முக்கிய நாடகக் கலைஞரான பராக்கிரம நிரியெல்ல சிங்களத்தில் மேடையேற்றினார். இந்நாடகத்தின் தமிழாக்கமும், ஹபீப் தன்வீரின் மூல நாடகத்தின் தமிழாக்கமும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. பாரதநாட்டின் சம்பிரதாயங்களுக்கேற்ப எழுதப்பட்ட மூல நாடகத்துக்கும், அதை ஆதாரமாகக் கொண்டு இலங்கை மக்களுக்கு ஏற்ற விதத்தில் எழுதப்பட்ட தழுவலுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை நாடக ரசிகர்களுக்கு அறியப்படுத்தவும், அரங்கியல் மாணவர்களுக்குப் பயன்படக்கூடியவகையிலும் இத்தொகுப்பு அமைகின்றது. இந்நாடகம் 2006இன் தேசிய நாடக விழாவில் மேடையேற்றப்பட்டு பல விருதுகளைப் பெற்றதுடன், இலங்கையில் தமிழ்-சிங்களப் பிரதேசங்களில் 200 தடவைகளுக்கு மேல் மேடையேற்றமும் கண்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 45451).