குழந்தை ம.சண்முகலிங்கம் (தமிழாக்கம்), நாகேந்திரம் நவராஜ் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
(4), 178 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-459-1.
கிரேக்க நாடகம் பல நூற்றாண்டுகாலம் படிப்படியாக வளர்ச்சிகண்டு, இறுதியில் கி.மு. 5ஆம் நூற்றாண்டில் அதன் உச்ச நிலையை அடைந்தது. இந்த நீண்ட மலர்ச்சியில்; மிகச் சிறந்த அவலச்சுவை நாடகாசிரியராக நின்றவர் சோஃபகிளீஸ் (கி.மு.495/96-406) ஆவார். பல வழிகளில் கிரேக்க அவலச்சுவை நாடகத்தின் வளர்ச்சிக்காகப் பணியாற்றிய இவர் 120 நாடகங்களுக்கு மேல் எழுதியுமுள்ளார். இன்று கிடைக்கப்பெறும் சோஃபகிளீஸின் ஏழு நாடகங்களுள் ‘அன்டிகனி’ நாடகம் மிகச் சிறந்த ஒன்றாக பலராலும் கருதப்படுகின்றது. இந்நாடகம் ஈடிப்பசு மன்னனின் நான்கு பிள்ளைகளுள் ஒருத்தியும் பேருணர்ச்சி மிக்கவளுமான அன்டிகனி பற்றியதாகும். சோஃபகிளீஸ், அன்டிகனியும் தீபிய புராணமும், சோஃபகிளீஸின்அன்டிகனி நாடகம், அன்டிகனி நாடகம் பற்றியதொரு பருமட்டான பார்வை, நாடகத்தைப் பகுப்பாய்வுசெய்தல் மற்றும் மதிப்பீடு செய்தல், உணர்வுபூர்வமான பதிற்குறியோடு நாடகத்தை வாசித்தல், பதிற்குறியோடு கூடிய வாசிப்புக்கு உதவக்கூடிய வினாக்கள், அன்டிகனி நாடகத்தைக் கற்கும்போது உதவக்கூடும் வினாக்கள், அன்டிகனி நாடகத்தை விளங்கிக்கொள்ளச் சில வினாக்கள், கிரேக்க அவலம் சுவைத்த அவலச்சுவை, கிரேக்க மற்றும் உரோமத் தெய்வங்கள், கிரேக்க ஐதீகத்தின்ஃபுராணத்தின் கடவுளரும் வீரர்களும் ஆகிய 12 தலைப்புகளின்கீழ் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது.