அஷ்ரஃப் சிஹாப்தீன். வத்தளை: யாத்ரா, 37, ஸ்ரீ சித்தார்த்த மாவத்தை, மாபோளை, 1வது பதிப்பு, நவம்பர் 2011. (கொழும்பு 15: Talent Printech, டலன்ட் பிரின்டெக், 20/4, மாதம்பிட்டிய வீதி).
xxvi, 144 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 19×13.5 சமீ., ISBN: 978-955-8448-07-6.
இது அரச சாஹித்திய தேசிய விருது பெற்ற ஒரு நூல். அரபுமொழியிலிருந்து ஆங்கில மொழிவழியாக இத்தமிழாக்கம் அமைந்துள்ளது. இத்தொகுதியிலுள்ள சிறுகதைகள் யாவும் ஈராக், எகிப்து, சூடான், சிரியா, பலஸ்தீனம், யெமன், மொரொக்கோ, ஓமான், லிபியா முதலான அரபு நாடுகளின் வெவ்வேறு காலகட்டத்து மக்கள் வாழ்வியலைக் கதைக்களமாகக் கொண்டு பின்னப்பட்டுள்ளன. அரபுலக மக்களின் வாழ்வியலின் ஒரு பகுதியை, ஒரு நிகழ்வை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ள இக்கதைகளின் வாயிலாகப் புலப்படுத்தப்படும் கலாச்சார அம்சங்கள் குறித்த புதிய தரிசனம் தமிழ் வாசகருக்குப் புதிய அனுபவமாகும். மொஹம்மட் சயீட், தௌபிக் அல் ஹக்கீம், தயிப் சாலிஹ், கஸ்ஸான் கனபானி, சக்காரியா தாமிர், யாசர் அப்டெல் பாகி, ராபியா ரயிஹானி, ஜோக்கா அல் ஹார்த்தி, உமர் எல் கெட்டி ஆகிய அரபுலகப் படைப்பாளிகளின் கதைகளின் தமிழாக்கமே இந்நூலாகும். விசர்நாய்க் கடி, புகையிரதம், விற்பனைக்கான அற்புதங்கள், ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள், சின்னச் சூரியன், காஸாவிலிருந்து ஒரு கடிதம், கறுப்புப் பூனை, சிவப்புப் புள்ளி, திருமணம், நெடுநாள்சிறைவாசி ஆகிய பத்துக்கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 175682).