மடுளுகிரியே விஜேரத்ன. பத்தரமுல்ல: நூல் அபிவிருத்திச் சபை, கல்விஅமைச்சு, இசுறுபாய, 1வது பதிப்பு, 2009. (பாதுக்க: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம், பானலுவ).
viii, 143 பக்கம், விலை: ரூபா 210., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-602-048-9.
இந்நூலில் பரிசுபெற்ற சில சிங்கள மொழிச் சிறுகதைகள் தமிழாக்கம் பெற்றுள்ளன. பொய் சொல்ல வேண்டாம் (ஜயதிலக்க கம்மல்லவீர), இனவாதிகள் (பியசீலி விஜேமான்ன), தோழர் இசத்தீன் (குணசேன விதான), செட்டி கடை முதலாளி (கே.பீ.நிஹால் நந்த), மேலே ஏறுவதற்கு ஏணி (ஏ.வீ.சுரவீர), சம்மா (கே.ஜயதிலக்க), தீச்சுடர் (இரஞ்சித் தர்மகீர்த்தி), அபாயமான இரவும் ரம்யமான காலையும் (இந்திரஜித் சிரிவீர), கொழும்பு பயணம் (சோமரத்ன பாலசூரிய), குயில் கூவும் குரல் கேட்காது (அரவீவில நந்திமித்ர), புதுமையான சம்பவம் (குணதாச அமரசேகர) ஆகிய பதினொரு சிங்களக் கதைகள் இங்கு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. இக்கதைகளின் வழியாக சிங்கள எழுத்தாளர்களின் கருத்துக்கள், உணர்வுகள், கண்ணோட்டங்கள் என்பவற்றைத் தமிழ்பேசும் மக்கள் அறிந்துகொள்ள வாய்ப்பேற்பட்டுள்ளது. அதே வேளை இக்கதைகளுக்கூடாகச் சிங்கள மக்களின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியல் என்பவற்றையும் அறிந்துகொள்ள முடிகின்றது. தமிழ்-சிங்கள இனங்களுக்கிடையே அன்பையும் ஒற்றுமையையும் வளர்த்து புரிந்துணர்வையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கு இலக்கியமே சிறந்ததென்று கருதும் ஒரு சிங்கள இலக்கியவாதி மடுளுகிரியே விஜேரத்ன.