ஆ.சபாரத்தினம். யாழ்ப்பாணம்: கலைவாணி புத்தக நிலையம், 2வது பதிப்பு, ஓகஸ்ட் 1968, 1வது பதிப்பு, 1968. (யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம், இல. 10, பிரதான வீதி).
xxiv, 364 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 6.00, அளவு: 18×12.5 சமீ.
அரசியல் வரலாறு, அரசியல் நிர்வாகம்-பொருளாதாரம், சமயம்-சமூகம் ஆகிய மூன்று பெரும் பிரிவுகளின் கீழ் 17 இயல்களில் இந்நூல் க.பொ.தராதர வகுப்பு மாணவர்களுக்காக எழுதப்பட்டுள்ளது. பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கையின் நிலை, கோட்டை அரசின் வீழ்ச்சி, சீதாவக்கையின் தோற்றமும் மறைவும் (1521-1592), யாழ்ப்பாண அரசின் வீழ்ச்சி, கண்டி அரசும் போர்த்துக்கேயரும், இரண்டாம் இராஜசிங்கனும் ஒல்லாந்தரும், இரு இறுதிச் சிங்கள மன்னரும் போர்த்துக்கேயரும், கண்டியில் நாயக்கர் மன்னராட்சி, கரையோர மாகாணங்களில் போர்த்துக்கேயர் நிர்வாகம், டச்சு அரசியல் நிர்வாக முறை, டச்சுக்காரரின் வணிக முயற்சிகள், ஒல்லாந்தர் கால விவசாய வளர்ச்சி, கண்டி இராச்சிய நிர்வாக முறை, கண்டி இராச்சியத்தின் பொருளாதார நிலை, போர்த்துக்கேயரின் சமயம் பரப்பும் முயற்சிகள், டச்சுக்காரரின் சமயம் பரப்பும் முயற்சிகள், போர்த்துக்கேயர் காலக் கல்விநிலை, டச்சுக்காரர் காலக் கல்வி வளர்ச்சி ஆகிய தலைப்புகளில் அவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38364).