சி.பொன்னம்பலம். யாழ்ப்பாணம்: சுந்தரம் பிரசுராலயம், அருளகம், அரியாலை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1956. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ பார்வதி அச்சகம், 288 ஆஸ்பத்திரி வீதி).
viii, 232 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 2.50, அளவு: 18×12.5 சமீ.
புது முறைப் பூகோளத்தின் மூன்றாம் பாகம் இலங்கையும் உலகமும் பற்றியதாக எட்டாம் வகுப்புக்கென அரசினர் விடுத்துள்ள புதிய பாடத்திட்டத்தைத் தழுவி எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர சி.பொன்னம்பலம் அரியாலையைச் சேர்ந்தவர். இலங்கையின் நிலையும் இயற்கைத் தோற்றமும், இலங்கையின் பொருளாதாரம், புமியின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்கள், தேசப்படங்கள், பூமி, பூமியின் நிலத் தோற்றம், சுகாத்தியமும் தாவரமும், தொழிலும் மக்கட்செறிவும், உணவுப்பொருள், உடைக்குரிய மூலப் பொருள்கள், பால் இறைச்சி மீன், சில மூலப்பொருள்களும் கைத்தொழிலும், போக்குவரவுச் சாதனங்கள் ஆகிய தலைப்புகளில் இந்நூலின் அத்தியாயங்கள் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 91108).