கே.எம்.எம்.இக்பால். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 1வது பதிப்பு, ஜனவரி 2015. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
iv, 90 பக்கம், விளக்கப்படங்கள், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 200., அளவு: 24.5×17.5 சமீ., ISBN: 978-955-7521-63-3.
2015 ம் ஆண்டின் புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப பாடசாலை மட்டக் கணிப்பீட்டு (SBA) நிகழ்ச்சித் திட்டத்தை அடிப்படையாகக்கொண்டு இந்நூல் ஆக்கப்பட்டது. அலகுரீதியான பாடக்குறிப்புகள், வினா-விடைகள் பட விளக்கப் பயிற்சிகள், முதலாம், இரண்டாம் மூன்றாம் தவணை மாதிரி வினா-விடைகளையும் உள்ளடக்கியது. பாடசாலையும் அதன் அயற் சூழலும், வீட்டின் அயற்சூழலில் உள்ள நிலத்தின் இயல்புகள், உங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள சூழலைச் சிறப்பாகப் பேணுதல், இலங்கையின் அமைவிடம் ஆகிய நான்கு பிரதான பகுதிகளாகப் பிரித்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 9995).