அரசகரும மொழித் திணைக்களம். கொழும்பு 7: கல்வி நூல் வெளியீட்டுப் பிரிவு, அரச கரும மொழித் திணைக்களம், 421 புல்லர் வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 1958. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்).
(2), 67 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×15.5 சமீ.
அரசகரும மொழித் திணைக்களத்தின் கலைச்சொற்கள் தொகுதியின் ஐந்தாவது பகுதியாக வெளிவந்துள்ள துறைசார் கலைச்சொற்றொகுதி இதுவாகும். முன்னர் வெளியிடப்பெற்ற புவியியல் கலைச்சொற்றொகுதியில் இடம்பெறாமல்போன புவியியில், புவிச் சரிதவியல், புவிவெளியுருவவியல் ஆகியவற்றுக்குரிய கலைச்சொற்கள் இதில் அடங்கியுள்ளன. கலாநிதி கா.குலரத்தினம், திரு. ஆ.பொ.கந்தசாமி, கலாநிதி வ.பொன்னையா, திரு. வே.சிவகுரு, திரு. சோ.செல்வநாயகம், திரு.அ.வி.மயில்வாகனன், திரு.வே.பேரம்பலம் ஆகியோர் சொல்லாய்ந்த குழுவில் அங்கம் வகித்துள்ளனர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 84632).