க.குணராசா (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234 காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1978. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234 காங்கேசன்துறை வீதி).
162 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 7.40, அளவு: 21×14 சமீ.
புவிவெளியுருவவியல் (Geomorphology) பற்றிப்பல அறிஞர்களின் கட்டுரைகளை உள்ளடக்கிய நூல் இது. புவியியல்: ஒரு தொகுப்பியல் (ஜீ.ஜீ.ஆர். தம்பையாபிள்ளை), புவியின் தோற்றம் (க.குணராசா), புவியின் அமைப்பு (க.குணராசா), கண்டங்களினதும் சமுத்திரங்களினதும் தோற்றம் (ஆ.இராஜகோபால்), கண்டவாக்கமும் மலையாக்கமும் (ஆ.இராஜகோபால்), எரிமலையியல் (க.இலங்கைநாதன்), புவியோட்டின் பாறைகள் (பொ.புவனராஜன்), சாதாரண அரிப்பு (எஸ்.சண்முகராஜா), டேவிசின் தின்னல் வட்டக் கொள்கை (யோகா இராசநாயகம்), நிலவுருவங்களை உருவாக்குவதில் காற்றின் பங்கு (கிருபாசக்தி ஏழூர் இராசரத்தினம்), பனிக்கட்டியாறு (கு.சோமசுந்தரம்), சுண்ணாம்புக் கற்பிரதேச நிலவுருவங்கள் (ஜோர்ஜ் எஸ்.கந்தையா), கடலரிப்பாலுண்டாகும் நிலவுருவங்கள் (ஆ.இராஜகோபால்), புவியோட்டில் ஏரிகள் (பொ.புவனராஜன்), புவிச் சரிதவியற் கால அட்டவணை ஆகிய 15 தலைப்புகளில் இந்நூலில் உள்ள கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. க.குணராசா அவர்கள் 1965இல் தொடங்கி இரு வருடங்கள் தொடர்ந்து வெளியிட்டுவந்த ‘புவியியல்’ என்ற சஞ்சிகையில் பெரும்பான்மையான கட்டுரைகள் முன்னர் இடம்பெற்றிருந்தன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 85147).