10870  பொற்காலப் புவியியல்: ஏழாம் வகுப்பு.

எம்.ஆர்.யோசேப்பு, ஜே.ஜே.அற்புதராஜா. யாழ்ப்பாணம்: கலைவாணி புத்தக நிலையம், 1வது பதிப்பு, 1969. (யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம்).

xiv, 234 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 3.50, அளவு: 21.5×13.5 சமீ.

கல்வி அமைச்சு வெளியிட்ட புவியியல் கற்பித்தலுக்குரிய வழிகாட்டியைத் தழுவி எழுதப்பெற்ற பாடநூல். இலகுதமிழ் நடையில் அமைந்துள்ள இந்நூல் விடயங்களின் நுண்ணிய கருத்துக்களை விளக்குவதற்கு தேசப்படங்களும் விளக்கப்படங்களும், புகைப்படங்களும்ஆங்காங்கே பொருத்தமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நூலின் முடிவில் சேர்க்கப்பட்டுள்ள வெளியுருவப் படங்களை, தேசப் பயிற்சிகளைச் செய்வதற்குப் பயன் படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளது. கண்டங்களின் அரசியல் பிரிவுகள் அடங்கிய வண்ணப்படங்களும் ஆங்காங்கே சேர்க்கப்பட்டுள்ளன. ஆபிரிக்கா-அறிமுகம், ஆபிரிக்காவின் தரைத்தோற்றம், ஆபிரிக்காவின் காலநிலையும் இயற்கைத் தாவரமும், ஆபிரிக்காவின் தெற்கு-கிழக்குப் பகுதிகள், ஆபிரிக்காவின் மேற்கு-மத்திய பகுதிகள், வட ஆபிரிக்கா, நைல்நதிப் பள்ளத்தாக்கு, ஐரோப்பா-அறிமுகம், ஐரோப்பாவின் தரைத்தோற்றம், ஐரோப்பாவின் காலநிலை, இலங்கையின் புதிய விவசாயக் குடியேற்றத்திட்டம், சிறுநிலப்பகுதியின் படவேலை, பிரித்தானியத் தீவுகள், மத்திய தரைக்கடல் நாடுகள், பிரான்சு, டிபநெலக்சு நாடுகள் ஆகிய 16 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 124895).  

ஏனைய பதிவுகள்

Bubble Craze Harbors

Content In love Bubbles Any time you Pop Some money on the Bubble Crazy Position? We want their view! What were their knowledge with this