10872 பொற்காலப் பூமிசாஸ்திரம் G.C.E.

வி.எஸ்.எஸ்.ராம் (மூலம்), ஜே.ஜே.அற்புதராஜா (திருத்தியவர்). யாழ்ப்பாணம்: கலைவாணி புத்தக நிலையம், 1வது பதிப்பு, ஏப்ரல் 1969. (யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம், இல. 10, பிரதான வீதி).

(5), 479 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 7.50, அளவு: 21.5×14 சமீ.

1965ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வந்திருக்கும் இலங்கைத் தமிழ்மொழி மூலக் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணப் பரீட்சைக்குரிய பாடத்திட்டத்தின்படி எழுதப்பட்டுள்ளது. பொது விபரம், பூமியின் அசைவுகளும் கால வேறுபாடுகளும், நீரும் நிலமும், உலகிலுள்ள இயற்கை வலயங்கள், ஆசியா-தரைத்தோற்றம், ஆசியா-அரசியற்பிரிவுகள், ஐரோப்பா, ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா, இரு அமெரிக்கக் கண்டங்கள், மண்வகைகளும் நில அரிப்பும், நீரோட்டங்களும் மக்கள் வாழ்க்கையும், கால நிலை, காலநிலை வலயங்கள் -சுவாத்திய மண்டலங்கள், இயற்கைத் தாவரங்கள், உணவுப்பொருள் விருத்தி, பண்படுத்தாப் பொருட்கள்-மூலப் பொருட்கள், மீன் பிடித்தல், காடு வளர்த்தலும் மரம் வெட்டுதலும், கனிப்பொருள்கள் 1-தாதுப்பொருள்கள், கனிப்பொருள்கள் 2, ஆடு மாடு வளர்த்தல், பாற் பண்ணைகள், பிரதான தொழில்கள்-1 கைத்தொழில்கள், பிரதான தொழில்கள் -2, குடியடர்த்தி-சனச்செறிவு, போக்குவரவு வசதிகள், உலகின் பிரதான ஆற்று வடிநிலங்கள் ஆகிய 28 தலைப்புகளில் அமைந்த அத்தியாயங்களின்கீழ் இந்நூலின் முதற்பகுதி எழுதப்பட்டுள்ளது. இரண்டாம் பகுதி தாய்நாடு பற்றியதாகும். இலங்கையின் தரைத் தோற்றம், இயற்கைப் பிரிவுகள், காலநிலை, காலநிலைப் பிரதேசங்கள், இயற்கைத் தாவரங்கள், பிரதான விளைபொருள்கள், கனிப்பொருள்கள், மக்கள் வாழ்க்கையும் தொழில்களும், குடியடர்த்தியும் பிரதான பட்டினங்களும், யாழ்ப்பாணத் தீபகற்பம், போக்குவரவு வசதிகள், பிறநாட்டுத் தொடர்புகள், புதியதிட்டங்களும் நாட்டின் வருங்காலமும், இலங்கையின் பிரதான குடியிருப்பு வகைகள், தேசப்படங்கள்ஆகிய 15 இயல்களை இப்பிரிவு கொண்டுள்ளது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 91110).  

ஏனைய பதிவுகள்

Wheel Out of Chance Position

Articles No Obtain No Registration: Mobile Play | 100 free spins no deposit ivan and the immortal king How to Discover Information about A position

Casinos Sportsbooks Casino poker

Blogs Bier fest review – Innovative Provides and you may Bonuses Caesars Castle Internet casino: Of numerous Advertisements When deciding on a mobile local casino,