10874 அமெரிக்காவில் முப்பது நாட்கள்: ஓர் அனுபவப் பகிர்வு.

A.A.M.றிப்தி அலி. கொழும்பு:  T.R.Media Networks, 1வது பதிப்பு, ஏப்ரல் 2014. (கொழும்பு: எம்.நபீஸ், பேர்பெக்ட் பிரின்டர்ஸ்).

72 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 21.5×14.5 சமீ.

கடந்த 2013இல் கோடைகாலத்திற்கான ஐக்கிய அமெரிக்க தாபன நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் 18.5.2013 முதல் 20.6.2013 வரையிலான ஐந்து வாரகால கல்விசார் நிகழ்ச்சித் திட்டமொன்றின்  மூலம் நான்கு இலங்கையர்களையும், பங்களாதேஷ், இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 15 பேரையும் ‘மாற்றமடைந்து வரும் மரபுவழி ஊடக முறைமை’ பற்றி மேலதிகமாகக்; கற்றக்கொள்ள ஒன்றிணைத்திருந்தது. ஒக்லஹோமா பல்கலைக்கழகத்தில் இந்தச் செயலமர்வு இடம்பெற்றது. இதில் பங்கேற்ற இலங்கையர்களுள் ஒருவரான  ‘தமிழ் மிரர்’ இணையத்தின் ஊடகவியலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அமைப்பின் செயலாளருமான றிப்தி அலி, தான் அமெரிக்காவில் ஒக்லஹோமா, சன் பிரான்சிஸ்கோ, வாஷிங்டன் ஆகிய பிரதேசங்களில் மேற்கொண்ட இந்தக் கல்விச் சுற்றுலாவின்போது உள்வாங்கிக்கொண்ட அனுபவங்களைப் பின்னர் தமிழ் மிரர் இணையத்தில் 11 கட்டுரைகளின் வாயிலாக பிரசுரித்திருந்தார். பின்னர் அதனைத் தொகுத்து இந்நூலுருவில் வழங்கியுள்ளார். ஐக்கிய அமெரிக்கா பற்றியும் குறிப்பாக அந்நாட்டின் ஊடகத்துறையோடு தொடர்பான நிறுவனங்கள் பற்றியும் பல தகவல்களை இந்நூலினூடாகப் பகிர்ந்துகொள்கிறார்.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 57546).

ஏனைய பதிவுகள்

17122 அமிர்த கடீசம்.

தியாக.சோமாஸ்கந்தராஜக் குருக்கள். பருத்தித்துறை: சிவஸ்ரீ தியாக. சோமாஸ்கந்தராஜக் குருக்கள், நெல்லண்டையான் வெளியீட்டுக் கழகம், நெல்லண்டை, தும்பளை, 1வது பதிப்பு, ஜுலை 2003. (கரவெட்டி: தமிழ்ப் பூங்கா மல்ரி ஓப்செட் பதிப்பகம், நெல்லியடி). xvi, 40

Inventaire En Casino Spin Château

Aisé Solution Du Colonne Endurant Pardon Interpeller À elles Pourboire De Opportune ? Avantage Dans le cadre de la Formation Í , du Va-tout Les meilleurs