தி.ஞானசேகரன். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46வது ஒழுங்கை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2015. (கொழும்பு 6: குமரன் பதிப்பகம், 39, 36வது ஒழுங்கை).
viii, 110 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், விலை: இந்திய ரூபா 300., அளவு: 201×14 சமீ., ISBN: 978-955-8354-50-6.
இலங்கையின் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியர் வைத்திய கலாநிதி தி.ஞானசேகரன், தனது துணைவியார் சகிதம், 2013இல் லண்டனில் இடம்பெற்றதொரு தமிழ் மகாநாட்டுக்கு வருகை தந்திருந்த வேளையில் அங்கு தங்கியிருந்த சுமார் ஒருமாத கால அனுபவத்தை தொடர்கட்டுரையாக ஞானம் இதழ்களில் எழுதி வந்திருந்தார். அந்தக் கட்டுரைத் தொடரின் நூல்வடிவம் இதுவாகும். லண்டன் தொடர்பான பல்வேறு சுவையான தகவல்கள் புகைப்படங்களுடன் இந்நூலில் சுவாரஸ்யமாக பதிவுசெய்யப்பட்டுள்ளன.