10877 புதுயுகம் கண்டேன்.

க.இந்திரகுமார். கொழும்பு 8: மக்கள் எழுத்தாளர் முன்னணி, 91, கொட்டா ரோட், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1976. (கொழும்பு 10: அல்பியன் பிரஸ், 157, ஜயந்த வீரசேகர மாவத்தை).

x, 174 பக்கம், படங்கள், விலை: ரூபா 4.90, அளவு: 18×12.5 சமீ.

இலங்கை சோவியத் நட்புறவுக் கழகத்தின் செயற்குழு உறுப்பினரான நூலாசிரியர் சோவியத் பயணக் கட்டுரையாக இந்நூலை எழுதியுள்ளார். புது யுகம் கண்டேன், வழிபாட்டுச் சுதந்திரம், தன்னிகரற்ற தலைநகர்க் காட்சிகள், வீதிகள் தெரிவித்த வாழ்க்கைத் தகவல்கள், பஸ் பிரயாணம் தந்த பாடங்கள், லெனின் சமாதி தரிசனம், வர்க்கமற்ற சமுதாயத்தில் சலுகைபெற்ற வர்க்கம், சமுதாய முன்னேற்றத்தின் சின்னங்கள், அற்புதமான குடியிருப்புத் திட்டங்கள், பூகம்பத்திற்கு படுதோல்வி, பாலைவனத்திற்கு பசுமை பாய்ச்சும் செயற்கை நதி, பாலைவனத்தில் சோலைவனம், தொழில்துறையின் விழுமியச் சிறப்பு, சம உரிமை கண்டு பொலிவுற்ற பெண்மை, உயரும் ஊதியங்கள் விழும் விலைவாசிகள், உள்ளங்கவர் பொல்ஷோய் நடனம், மெய்யான மார்க்சிச-லெனினிசக் கலாச்சாரப் பரட்சி, மக்கள் இலக்கியம் படைத்தவர்கள், கலைத்தாய் களிநடம் புரிந்தனள், நூறு தேசிய இனங்கள் இணைந்த அன்புக் குடும்பம் ஆகிய 20 தலையங்கங்களின் கீழ் சோவியத் பயண அனுபவங்களை இந்நூலில் விபரித்துள்ளார். நூலாசிரியர் டாக்டர் க. இந்திரகுமார் இலங்கைப் பல்கலைக்கழக (கொழும்பு வளாக) மருத்துவ பீடத்தில் சட்ட மருத்துவ விரிவுரையாளராகவும், மக்கள் எழுத்தாளர் முன்னணியின் (People’s Writers Front) பொருளாளராகவும், ககாரின் விண்வெளிக் கழகத்தின் தலைவராகவும் இலங்கையில் பணியாற்றியவர். பின்னாளில் புலம்பெயர்ந்து லண்டனில் வாழ்ந்து 21.12.2008இல் அங்கு மறைந்தவர். லண்டனில் வாழ்ந்த வேளை, ‘மேகம்’ என்ற சஞ்சிகையை சிலகாலம் வெளியிட்டவர். இந்நூல் மக்கள் எழுத்தாளர் முன்னணியின்  ஒன்பதாவது பிரசுரமாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 120841).

ஏனைய பதிவுகள்