அஷ்ரஃப் சிஹாப்தீன். வத்தளை: யாத்ரா வெளியீடு, 37, ஸ்ரீ சித்தார்த்த மாவத்தை, மாபோளை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2009. (கொழும்பு 10: குமரன் அச்சகம், B3-G3. ரம்யா பிளேஸ்).
vi, 74 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 18×12.5 சமீ., ISBN: 978-955-8448-05-2.
தினகரன் வாரமஞ்சரியில் தொடராக வெளிவந்த பயணக் கட்டுரை இதுவாகும். இலக்கியத்துறையில் ஈடுபாடுகொண்ட ஜின்னாஹ் ஷெரிபுத்தீன், அல் அஸூமத், தாஸிம் அஹமது ஆகியோருடன் இக்கட்டுரையாசிரியர் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களும் இணைந்து மேற்கொண்ட இந்தியப்பயணத்தின் சுவைமிகு அனுபவங்கள் இந்நூலில் நினைவுகூரப்பட்டுள்ளன. சென்னைப் புத்தகக் கண்காட்சியுடன் இணைந்த ஆசிரியரின் நூல் அறிமுக விழா, கேரளாவின்-அல்லப்பே படகுச்சவாரி, மைசூர் மகாராஜாவின் அரண்மனை, தீரர் திப்புசுல்தானின் நினைவாலயம், கோழிக்கோடு பத்திரிகைக் காரியாலயம் போன்ற பல விடயங்கள் அவர்களது பட்டியலில் அடங்கியிருந்தன. இவற்றில் எதைப் பார்த்தார்கள் எப்படி ரசித்தார்கள் என்பது இந்நூலில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 219419).