S.T.B. இராஜேஸ்வரன். மானிப்பாய்: ஆர் பிரசன்னா, மகேச பவனம், இணுவில் வீதி, 1வது பதிப்பு, 2001. (யாழ்ப்பாணம்: உயர்கல்விச் சேவைகள் பதிப்பகம்).
xvi, 150 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 200., அளவு: 21.5×15 சமீ.
இந்நூல், யாழ்ப்பாணக் குடாநாட்டினதும் அதன் அயலில் அமைந்துள்ள தீவுக்கூட்டங்களினதும் பௌதீகப் பின்னணி, மேற்படி பிரதேசத்தின் தோற்றம், கட்டமைப்பு பற்றிய கருத்துக்கள், அண்மைக்கால நிலவுருவாக்க செயன்முறைகள் சிறப்பாக கடல்மட்ட மாறுதல்களுடன் தொடர்பானவை, பிளித்தோசின்-கொலோசின் கால கடல்மட்ட மாற்றமும் இலங்கையின் கடல்மட்ட மாற்றமும், இலங்கையின் வடகரையோரப் பகுதிகளும், யாழ்ப்பாணக் குடாநாட்டினதும் அதன் அயலில் அமைந்துள்ள தீவுக் கூட்டங்களினதும் தோற்றம் தொடர்பாக முன்வைக்கப்படும் கருத்துக்கள் ஆகிய ஆறு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. தென் இந்திய இலங்கை புவியோட்டமைப்பியல்பற்றி இதுவரை வெளிவந்த ஆய்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்படி பிரதேசத்தின் அமைப்பியல் (Structure) பற்றிய விளக்கத்தையும், இந்திய இலங்கைச் சூழல்களில் குறிப்பாகத் தென்னிந்திய-வட இலங்கைச் சூழல்களில் இறுதியாக நிகழ்ந்த (கொலோசின் காலம்) கடல்மட்ட மாற்றங்களின் விளைவால் ஏற்பட்டிருக்கக்கூடிய செயன்முறைகளை ஆதாரமாகக்கொண்டு இப்பிரதேசத்தின் தோற்றம் பற்றிய விளக்கத்தையும் தருகின்றது. தென்னிந்தியாவிலும் தென் இலங்கையிலும் மேற்கொள்ளப்பட்ட கடல்மட்ட மாற்றம் குறித்த ஆய்வுகளை எமது பிரதேசத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்கும்பொழுது அவை எமது பிரதேசத்தின் கடந்தகாலம் பற்றிப் புதிய தகவல்களை வெளிப்படுத்துபவையாக உள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி இராஜேஸ்வரனின் மூன்றாவது புவியியல் நூல் இதுவாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 130855).