அ.லெ.மு.ராசீக். சென்னை 600001: அஸ்மா பதிப்பகம், 51, அன்டர்சன் வீதி, 1வது பதிப்பு, 1996. (சென்னை 600114: அருள்வேல் அச்சகம், 40-D, வேம்புலி அம்மன் கோவில் வீதி, பழவந்தாங்கல்).
112 பக்கம், விலை: இந்திய ரூபா 35., அளவு: 21.5×13.5 சமீ.
இஸ்லாமிய பண்பாட்டு, நாகரீக வளர்ச்சிக்கும், உலகளாவிய முஸ்லிம் சமூகத்திற்கும் ஆக்கப்பணிபுரிந்த அறிஞர்கள் பற்றி அ.லெ.மு.ராசீக் அவர்களால் வழங்கப்பட்ட வானொலி உரைகளின் எழுத்து வடிவம் இந்நூலாகும். இமாமுல் அஃலம் அபூஹனீபா (ரஹ்), 19ஆம் நூற்றாண்டின் புரட்சிக் கனல் ஜமாலுதீன் அப்கானி, சுல்தானுல் அரிபின் சையித் அகமத் கபீர் (ரஹ்) அவர்கள், எகிப்தின் புரட்சித் தலைவர் அகமத் ஒராபி பாஷா, கணிதமேதை முகம்மத்-பின்-மூஸா அல்குவரிஸ்மி, அலிகாரை உருவாக்கிய உத்தம சேவகர் சேர் சையத் அஹமத்கான், மருத்துவத்துறை விற்பன்னர் சக்கரியா அல்ராசி, இலங்கை முஸ்லிம்களின் ஞானதீபம் முகம்மது காசீம் சித்திலெப்பை, பல்கலை அறிஞர் அல்பிரூனி, மருத்துவ மாமேதை அபூ அலிசீனா (அலிசென்னா), அறிஞர் மௌலவி தாசீன், வரலாற்றாசிரியர் அபூஜபார் அல்தபரி, மாபெரும் அரசியல் ஞானி நிசாமல் முல்க்தூசி, உலகப் பகழ் கவிஞர் உமர் கையாம், அருள்வாக்கி அப்துல் காதிர், பாரசீகப் பெருங்கவிஞர் ஷேக் சாஅதி, இசைஞானி அமிர் குஸ்ரூ, புகழ்பூத்த பெரியார் கசாவத்தை அலிம்அப்பா, இணையற்ற தேச சஞ்சாரி இப்னு பதூதா, இணையற்ற வரலாற்றாசிரியர் இப்னு கல்தூன் ஆகிய இருபது தலைப்புகளில் இவ்வுரைகள் ஆற்றப்பட்டுள்ளன. நூலாசிரியர் இலங்கையில் பொல்கஹவெலவைச் சேர்ந்தவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23816).