கனகசபாபதி நாகேஸ்வரன், எஸ்.வை.ஸ்ரீதர், ம.ந.கடம்பேசுவரன் (ஆசிரியர் குழு). யாழ்ப்பாணம்: கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் மணிவிழாக் குழு, நல்லூர், 1வது பதிப்பு, ஏப்ரல் 2013. (தாவடி: Man Draw).
viii, 44 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.
வாகீசகலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் 05.08.1952இல் பிறந்தவர். சப்பரகமுவ பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இவரது மணிவிழாவையொட்டி 06.04.2013 அன்று இம்மலர் வெளியிடப்பட்டுள்ளது. இம்மணிவிழாவின்போது கௌரவிக்கப்பட்ட பல்துறை சார்ந்த இருபத்திநான்கு சான்றோர்களின் விபரமடங்கியதாக இக்கைந்நூல் வெளிவருகின்றது. திருவாளர்கள் வை.க.சிற்றம்பலம் (தமிழ்க் கவிதை), க.வைத்தீஸ்வரக் குருக்கள் (வேதாகமம்), ஐ.சரவணபவன் (சோதிடக்கலை), நாக.சிதம்பரநாதர் (ஆன்மீகம்), செல்வி விசுவாம்பா விசாலாட்சி (சமய இலக்கியம்), பேராசிரியர் வி.சிவசாமி (ஆய்வறிவியல்/வரலாறு), பண்டிதை பொன். பாக்கியம் (தமிழ் மொழி), கா.ஆ.தியாகராசா (அறப்பணி), க.பரமலிங்கம் (இந்து விவகாரம்), ச.விநாயகமூர்த்தி (சொற்பொழிவு), ந.குழந்தைவேலு (தமிழ்த்துறை), தி.பொன்னம்பலவாணர் (சைவசித்தாந்தம்), ம.ந.கடம்பேசுவரன் (தமிழ் இலக்கணத்துறை), மு.சபாநாதன் (திருப்பணி/சமூக நலன்), ந.வி.மு.நவரெத்தினம் (பண்ணிசைத்துறை), சோ.சபாநாதன் (சித்த மருத்துவத்துறை), திருமதி கிரிஷாந்தி ரவீந்திரா (நடனத்துறை), க.கணேசராசா (கல்லூரி நிர்வாகம்), திருமதி ச.அருள்நங்கை (இந்துக் கல்வித்துறை), திருமதி இமெல்டா சுகுமார் (சமூக நலத்துறை), டாக்டர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா (மருத்துவத்துறை), க.ஜெயநாயகம் (திருப்பணி/தொழிற்றுறை), க.இராசரெத்தினம் (குருகுல நிர்வாகம்), வைத்திய கலாநிதி நடராசா ஜெயக்குமார் (மருத்துவத்துறை.) ஆகியோர் பற்றிய புகைப்படங்களும் வாழ்க்கைக் குறிப்புகளும் இந்நூலில் காணப்படுகின்றன.