பரணி. வவுனியா: அகரம் வெளியீட்டகம், 1வது பதிப்பு, தை 2012. (வவுனியா: இளங்கோ பிரின்டர்ஸ், இல. 130, குட்ஷெட் வீதி).
x, 343 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 345., அளவு: 20.5×14.5 சமீ.
அகரம் வெளியீட்டுத் தொடரில் இரண்டாவது பிரசுரமாக வெளிவந்துள்ள நூல். தத்துவஞானிகளின் தந்தை சாக்ரட்டீஸ், சிந்தனைச் செம்மல் பிளேட்டோ, அடிமை வர்க்கத்தின் விடிவெள்ளி ஆபிரஹாம் லிங்கன், மீசைக் கவிஞன் பாரதியார், அறிவியல் மேதை அப்துல் கலாம், நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் என இன்னோரன்ன தலைப்புகளில் 66 வரலாற்று முக்கியத்துவம் மிக்க பிரமுகர்களின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறு கட்டுரைகளாக இந்நூல் பதிவுசெய்கின்றது. சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில், மகா அலெக்சாந்தர், ஆர்க்கிமிடீஸ், ஜுலியஸ் சீஸர், கிளியோபாட்ரா, செங்கிஸ்கான், கொலம்பஸ், கலிலியோ கலிலி, நியூட்டன், லவாய்சியர், மோட்ஸார்ட், நெப்போலியன், பீத்தோவன், மைக்கெல் பரடே, ஆபிரஹாம் லிங்கன், கார்ள் மார்க்ஸ், வில்லியம் மார்ட்டன், கிரிகோர் மெண்டல், அல்ப்ரெட் நோபல், தோமஸ் அல்வா எடிசன், அலெக்ஸாண்டர் கிரகம் பெல், ஹென்றி போர்ட், ரைட் சகோதரர்கள், மேரி கியுரி அம்மையார், லெனின், எர்னஸ்ட் ரூதர் போர்ட், அல்பர்ட் ஐன்ஸ்டைன், ஹெலன் கெல்லர், அலெக்ஸாண்டர் பிளெமிங், ஜான் லோகி பேர்ட், சார்ளி சப்ளின், மர்லின் மன்ரோ, ஹிட்லர், வால்ட் டிஸ்னி, ரேமண்ட் அல்பர்ட் க்ராக், ஜெசி ஓவன்ஸ், நெல்சன் மண்டேலா, ஓஷோ, பெலே, புரூஸ் லீ, அல் கடாபி, கிரிஸ்டோபர் ரீவ்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ், பில் கேட்ஸ், ஒஸாமா பின்லேடன், ஸ்காட் ஹமில்டன், மைக்கல் ஜாக்சன், இளவரசி டயானா, அக்யோ மொரிட்டோ, இடி அமீன், பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா, ஜிம் ஜோன்ஸ், முசொலினி, அப்துல் கலாம், கல்பனா சாவ்லா, அன்னை தெரசா, மஹாத்மா காந்தி, தந்தை பெரியார், ஏ.ஆர்.ரஹ்மான், சச்சின் டென்டுல்கர், முத்தையா முரளீதரன், சுப்பிரமணிய பாரதியார், சி.வி.ராமன் ஆகிய பிரமுகர்கள் பற்றிய தகவல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.