இணுவையூர் ஆ. இரகுபதி பாலஸ்ரீதரன். கொழும்பு 6: சுமதி பதிப்பகம், 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 13: கீதா பப்ளிக்கேஷன்ஸ்).
296 பக்கம், ரூபா 500., அளவு: 19.5×13 சமீ., ISBN: 978-955-51144-5-5.
2010-2014 காலகட்டத்தில் ஆசிரியர் பத்திரிகைகளுக்கு எழுதிய 51 ஆக்கங்களின் தொகுப்பு இதுவாகும். இனம். மொழி, நாட்டுப்பற்றுடன் செயற்பட்டு மறைந்தும், தமிழர்களின் மனதைவிட்டு மறையாத ஆளுமைகள் பற்றியதாக அனைத்துக் கட்டுரைகளும் அமைந்துள்ளன. ஒவ்வொரு ஆளுமை பற்றியும் மிக விரிவான தகவல்கள் இக்கட்டுரைகளில் காணப்படுகின்றன. தினக்குரல், வீரகேசரி ஆகிய பத்திரிகைகளில் பெரும்பான்மையானவை வெளிவந்துள்ளன. வெள்ளிமணி, சங்கத்தமிழ் ஆகியவற்றில் வெளிவந்த இரு கட்டுரைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. தஞ்சாவூர், தமிழ்த்தாய் அறக்கட்டளை, தமிழ்நாடு தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு இணைந்து நடத்திய உலகத் தமிழ்ப் படைப்பாளர்கள்-2016 மாநாட்டில் 2015இற்கான சிறந்த தொகுப்பு நூலாகத் தெரிவுசெய்யப்பட்டு தஞ்சாவூர்-தமிழ்ப் பல்கலைக்கழக கரிகாற்சோழன் கலையரங்கத்தில் 14.02.2016 அன்று விருது வழங்கி ஆசிரியர் கௌரவிக்கப்பட்டார்.