வ.மா.குலேந்திரன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2013. (சென்னை 600094: ஸ்கிரிப்ட் பிரின்டர்ஸ்;).
viii, 128 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 75., அளவு: 21×14 சமீ
இங்கிலாந்தின் எலிசபெத் மகாராணியார் பற்றி வெளிவந்திருக்கும் ஈழத்தமிழரின் முதலாவது நூல் இதுவாகும். மகாராணியின் வாழ்க்கை வரலாற்றுடன், அவர் சென்ற நாடுகள், பங்கேற்ற வைபவங்கள், தலைமைதாங்கிய மகாநாடுகள், கூட்டத் தொடர்கள், அவரின் குடும்ப உறவுகள், அவர்களின் குடும்பத்தில் நடந்தேறிய வைபவங்கள், நாட்டின் முக்கிய நிகழ்வுகள் போன்ற பலவேறு விடயங்களும் புகைப்படங்களுடன் இந்நூலில் தொகுக்கப்பெற்றுள்ளன. ஆட்சிபீடம் அழைக்கிறது, நால்வரல்லவோ நாம், போர்க்காலத்தில், நேரில் வந்தார் இளவரசர், என் தேவதை இவள்தான், மணிமுடி சூடும் நாள் வந்தது, என் காதல் உன்னோடுதான், புதிய போக்குகள், காமன்வெல்த் பயணங்கள், அரச குடும்பம், மனம் பார்க்கிறது, நான் பெற்ற பேறு, மணமகள் தேர்வு, குடும்ப சச்சரவுகள், உறவும் பிரிவும் வெறும் சொற்களல்ல, கடவுள் ராணியைக் காப்பாராக ஆகிய 16 அத்தியாயங்களில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது.