தம்பிஐயா தேவதாஸ். கொழும்பு 13: வித்தியாதீபம் பதிப்பகம், 90/9 புதுச்செட்டித் தெரு, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 13: சன் பிரின்டெக்).
xvi, 240 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 400., அளவு: 18.5×13.5 சமீ., ISBN: 978-955-96785-8-8.
தினக்குரல் பத்திரிகையில் வாராந்தம் தொடராக வெளிவந்த இலங்கை வானொலியின் ஒலிபரப்பாளர்களின் வாழ்வும் பணியும் பற்றிய பதிவின் நூலுரு இதுவாகும். ஒலிபரப்புத்துறையில் களம்கண்ட 50பேர் பற்றிய பல்வேறு வரலாற்றுக்குறிப்புகள், விபரங்கள், புகைப்படங்கள் என்பன இந்நூலில் இடம்பெற்றுள்ளன. வெறுமனே அறிவிப்பாளர்களின் சாதனைப்பட்டியலாக மட்டுமில்லாது, அவர்களது பிறப்பு, குடும்பப் பின்னணி, கல்விச் சூழல், அறிவிப்புத் துறையில் அவர்கள் வெளிக்காட்டிய திறமைகள், என ஒரு அறிவிப்பாளனுக்குரிய பல பக்கங்களையும் சுருக்கமான முறையில் மிக நேர்த்தியாக வாசகர்களுக்குத் தொகுத்தளித்துள்ளார். சோ.நடராஜன், சோ.சிவபாதசுந்தரம், எஸ்.குஞ்சிதபாதம், கே.எஸ்.நடராஜா, சானா.சண்முகநாதன், எஸ்.சரவணமுத்து, வி.என்.பாலசுப்பிரமணியம், விவியன் எஸ். நமசிவாயம், வி.ஏ.கபூர், எஸ்.புண்ணியமூர்த்தி, வீ.ஏ.சிவஞானம், எஸ்.பி. மயில்வாகனன், வீ.சுந்தரலிங்கம், திருமதி செந்திமணி மயில்வாகனன், சி.வி.ராஜசுந்தரம், திருமதி ஞானம் இரத்தினம், வி.பி.தியாகராஜா, எஸ்.கே.பரராஜசிங்கம், வீ.ஏ. திருஞானசுந்தரம், திருமதி பொன்மணி குலசிங்கம், வண.அரச ஐயாத்துரை, எம்.எச்.குத்தூஸ், ஜோர்ஜ் சந்திரசேகரன், இராஜகுரு சேனாதிபதி கனகரெத்தினம், என்.சிவராஜா, திருமதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன், செல்வி சற்சொரூபவதி நாதன், திருமதி இராஜேஸ்வரி சண்முகம், திருமதி புவனலோஜனி நடராஜசிவம், பி.எச்.அப்துல் ஹமீத், விமல் சொக்கநாதன், எஸ்.நடராஜ ஐயர், பி.விக்னேஸ்வரன், வீ.என். மதியழகன், கே.ஜெயகிருஷ்ணா, இளையதம்பி தயானந்தா, சி.நடராஜசிவம், அருணா செல்லத்துரை, மயில்வாகனம் சர்வானந்தா, எஸ்.விஸ்வநாதன், திருமதி ஆனந்தி சூரியப்பிரகாசம், இரா. பத்மநாதன், எஸ்.எழில்வேந்தன், கே.எஸ்.ராஜா, காவலூர் ராஜதுரை, கே.எஸ்.சிவகுமாரன், ஆர்.சந்திரமோகன், சனூஸ் மொஹமட் பெஃரோஸ், பாலசிங்கம் பிரபாகரன், முருகேசு ரவீந்திரன் ஆகியோர் பற்றிய குறிப்புகள் இந்நூலில்; இடம்பெற்றுள்ளன.