வ.செல்லையா. கொழும்பு 4: கொழும்பு சிவயோக சுவாமி நம்பிக்கை நிதியம், 84/6, லோரிஸ் வீதி, 1வது பதிப்பு, மார்கழி 2003. (கொழும்பு 13: லக்ஷ்மி பிரின்டர்ஸ், 103ஏ, விவேகானந்தா மேடு).
vii, 93 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 21.5×14.5 சமீ.
இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் சைவப் புலவர்மணி வித்துவான் வ.செல்லையா. 20க்கும் அதிகமான நூல்களை எழுதிய பன்னூலாசிரியர். 06.03.2003 அன்று மறைந்த இவர் மெஞ்ஞானிகள் என்று தான் கருதிய கடையிற் சுவாமியார், செல்லப்பா சுவாமிகள், சிவயோக சுவாமிகள், நவநாத சித்த சுவாமிகள், பெரியானைக்குட்டிச் சுவாமியார், சித்தானைக்குட்டிச் சுவாமியார், குழந்தைவேலுச் சுவாமியார் ஆகிய ஏழு சித்தர்கள் பற்றி ஆராய்ந்து இந்நூலை எழுதியுள்ளார். சித்தர்தமைப் போற்றிடுவோம், வரலாற்றில் இடம்பெறாத சந்நியாசிகள், சாதுக்கள் தரிசனம், சித்தர்களின் தத்துவ ஞானங்கள், ஈழத்துச் சித்த சிரோமணிகள், கடையிற் சுவாமியார், செல்லப்பா சுவாமிகள், சிவயோக சுவாமிகள், நவநாதசித்த சுவாமிகள், பெரியானைக்குட்டி சுவாமியார், சித்தானைக்குட்டி சுவாமியார், குழந்தைவேலு சுவாமியார் ஆகிய 12 அத்தியாயங்களில் இந்நூல் விரிந்துள்ளது.