இந்துக் குருமார் பேரவை. மன்னார்: இந்துக் குருமார் பேரவை, மன்னார் மாவட்டம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை).
112 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ.
தமிழிலக்கியத்தில் இந்துசமயம் (அ.சண்முகதாஸ்), வள்ளுவர் வகுத்த இல்லறம்- ஒருநோக்கு (மனோன்மணி சண்முகதாஸ்), நடராஜ விக்கிரகம் உணர்த்தும் சைவ சித்தாந்தக் கோட்பாடு (கு.நர்மிலராஜ்), சிவ சின்னங்களில் உருத்திராட்சம் (பிரம்மஸ்ரீ தா.மாரீஸ்வர சர்மா), ஆடற் கலையே தேவன் தந்தது (உஷா ஸ்ரீஸ்கந்தராஜா), தத்தாத்ரேயரின் குரு 24 (ஐங்கர சர்மா), ஆகம வழிபாட்டில் பாலஸ்தாபனத்தின் சிறப்பும் விளக்கப்படவேண்டிய விக்கிரகங்களும் (இந்துஒளி), இந்துக்களும் அன்பு நெறியும் ஆகிய பிரதான கட்டுரைகள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. கரவெட்டி தன்னையூரில் பிறந்த சங்கர ஐயரின் புத்திரர் சபாரத்தினக் குருக்களின் மகனாக 06.09.1951இல் பிறந்தவர். நீதிபதி மு.திருநாவுக்கரசு அவர்களால் மன்னார் ஞானவைரவர் தேவஸ்தானத்தில் 1996இல் வழங்கப்பட்ட கமல பூஷணம் பட்டம், 2003இல் காட்டாஸ்பத்திரி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தினரால் வழங்கப்பட்ட சிவாச்சாரிய திலகம் என்ற பட்டம், 2005இல் ஜனாதிபதி ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட தேச சக்தி என்ற பட்டம், International University of Martial Arts அமைப்பினால் வழங்கப்பட்ட கலாநிதிப் பட்டம் ஆகியவற்றைப் பெற்றவர்.