அன்னை சித்தர் இராஜ்குமார் குருஜி. கொழும்பு 13: மாதாஜி ராதா, 59, கல்லூரி வீதி, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி).
xi, 226 பக்கம், விளக்கப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ., ISBN: 978-955-53553-0-8.
‘75000 பிரளயங்களைக் கண்டவரும் பூலோக இந்திரன் என தேவர்களாலும் ரிஷிகளாலும் போற்றப்படுபவரும் ஆகிய ஸ்ரீலஸ்ரீ காகபுஜண்ட மகரிஷியுடன் மலை அனுபவம்’ என்ற நூல் அறிமுகக் குறிப்புடன் இந்நூல் பிரம்மரிஷிமலை அன்னை சித்தர் இராஜ்குமார் குருஜியால் எழுதப்பட்டுள்ளது. சுயதரிசனம், கண்டேன் சித்தர் பெருமானை, நான் கண்ட கனவு, சித்தர் காட்டிய வழி, பச்சை மலைப் பயணம், தேவகானம், எட்டெருமைப் பாளி, எனது கேள்விகளுக்கு சித்தர் அளித்த பதில்கள், சித்தரின் குடிசையில் தஞ்சம், ஆஸ்ரம அதிசயங்கள், மாண்டவர் மீண்ட அற்புதம், சித்தருடன் எனது ஆன்மீகப் பயணம், பொதிகை மலை, கொல்லிமலை, அருள்மிக கொல்லியம்பாவை, நம்பிமலை, அருள்மிகு புதுமைலட்சுமி அம்மன் கோவில், போகர் மாமுனிவரின் சுப்பிரமணியசுவாமி பாதம், தாய்பாதம், தீர்த்தமலை, ஜவ்வாது மலை, சுருளிமலை, சதுரகிரி மகாலிங்கம் மலையில் அரசுச் செயலர் திரு சண்முகசிகாமணி ஐ.ஏ.எஸ். போட்ட உத்தரவும் பக்தர்களின் ஆனந்தமும், தாய் பாதத்தில் கதண்ட மகரிஷியின் கோபம், ஸ்ரீலஸ்ரீ காகபுசுண்டர் தலையாட்டி சித்தரின் காலஞானம், அன்னதானத்தின் பெருமை, கருந்தேள் ஆகிவந்த காகபுஜண்டர் மகரிஷி, சாமியாராகவும் இல்லை சம்சாரியாகவும் இல்லை, திருவண்ணாமலையில் கோபூஜை ஆரம்பம், குண்டலி சக்தி என்றால் என்ன, தருமத்தில் சிறந்த அண்ணன் தம்பி, அன்னை சித்தர் இராஜ்குமார் அவர்களின் பிரம்மரிஷி மலைவாசம், அன்னை சித்தரைப் பற்றி (பிரபலங்கள்), ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் கூறிய சித்தர்கள் வல்லமை, சித்தர் நாமவளி வரலாறு, மகாசித்தர்கள் டிரஸ்டின் மாதாந்த விசேடங்கள் ஆகிய 36 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. 2004இல் குருகடா~ம் மாத சஞ்சிகையில் தொடராக வெளிவந்த கட்டுரையின் நூல்வடிவம் இது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50112).