10892 நல்லை திருஞான சமபந்தர் ஆதீனம்: குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு.

நாக. பரமசாமி. யாழ்ப்பாணம்: நாக.பரமசாமி, குருபாதம், 28, திருமகள் வீதி, அரியாலை, 1வது பதிப்பு, 1992. (யாழ்ப்பாணம்: நியு சென்றல் அச்சகம்).

(6), 46 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.

யாழ்ப்பாணம், நல்லூர் ஆனந்த வித்தியாலய அதிபராகப் பணியாற்றிய நூலாசிரியர், நல்லை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாததேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் வாழ்வும் ஆன்மீகப் பணிகளும் பற்றி எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல் இதுவாகும். இலக்கியப் புலமைமிக்க ஆசிரியர் நாச்சியார் அந்தாதி (1979), மூத்தவிநாயகர் திருவந்தாதி (1984), நல்லைக் கந்தரந்தாதி (1986), நாச்சியார் நான்மணிமாலை (1982), நாச்சியார் திருவூசல் (1983), நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (1983) ஆகியவை உள்ளிட்ட பல நுல்களை எழுதியவர். நல்லை ஆதீனத்தில் வெள்ளிக்கிழமைகளில் இசைச்சொற்பொழிவுகள், பெரியபுராண உரை, திருவாதவூரடிகள் புராணஉரை என்பவற்றை நிகழ்த்திவருபவர். நல்லை ஆதீனத்தின் ஓதுவார்களுள் ஒருவராகவும், ஆதீனக் கவிஞராகவும் சேவையாற்றியவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 92177).  

ஏனைய பதிவுகள்

13103 சித்தர்களும் சிவபூமி மண்ணின் எழுகோலமும்.

இணுவையூர் மூ.சிவலிங்கம். யாழ்ப்பாணம்: இணுவில் சைவத்திரு நெறிக் கழகம், காரைக்கால் வீதி, இணுவில் கிழக்கு, இணுவில், 1வது பதிப்பு, மார்ச் 2019. (கொழும்பு 13: தேவி பிரின்டர்ஸ், 41, Brass Founders Street). xiv,

login afiliado bet365

Content Experimente o site: Poker Online Dado – E e onde jogar poker online Tipos de Bônus A sociedade pressuroso Poker Online Brasílico Aproveite a

15732 புளியமரத்துப் பேய்கள்.

ம.நிரேஸ்குமார். கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661/665/675  பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2017. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). xvi, (3), 20-112 பக்கம், விலை: ரூபா